சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 24 September, 2018 9:05 AM IST
banana Flower

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. இதில் வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

  1. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

  2. வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் காக்கும்.

  3. ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற, வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது.

  4. இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி, அதனால் வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்றும் வல்லமை, வாழைப் பூவுக்கு உண்டு. செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

  5. மலச்சிக்கலைப் போக்கும், சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கும்.

  6. பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் குணம் கிடைக்கும்.

உடல் சூட்டைக் குறைக்க

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும், இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

 

கை, கால் எரிச்சலை குணமாக்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

 

மலட்டுத்தன்மையைப் போக்க

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

English Summary: Uses of banana flower
Published on: 24 September 2018, 09:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now