ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியே ஆயுதம் (The vaccine is the weapon)
கொரோனாவானாலும் சரி, ஒமிக்ரானாலும் சரி தடுப்பூசியே ஆயுதம்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமே, வைரஸ் தொற்றில் இருந்து தப்புவதுடன் உயிர்பலி தடுக்கப்படும் என மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.
அது மட்டுமல்லாமல், தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளும் மறுபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி முகாம்கள் (Vaccination camps)
18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக அடிக்கடி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருவதால், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி எப்போது தொடங்குமோ என எதிர்பார்க்கப்பட்டது.
33 லட்சம் இலக்கு (33 lakh target)
இந்நிலையில், ஜனவரி 3ம்தேதி முதல் 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாக, 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், ஒமைக்ரான் பரவல் அதிகரிக்காமல் தடுக்கவும், தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 10ம் தேதி
மேலும் ஜனவரி 10ம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.
முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜனவரி 10ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்களப் பணியாளர்கள் மூலம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இல்லை: முதல்வர் அறிவிப்பு!
5 நாட்களுக்கு குளிர்ந்த வானிலை: காலநிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு!