தமிழகம் முழுவதும் நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனாத் தடுப்பு (Corona prevention)
கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுக்கத் தமிழக அரசுப் போர்க்கால அடிப்படையில் அதிரடி நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் ஆலோசனை (Chief Minister's advice)
இதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவாசியப் பொருட்களை விநியோகிப்பதுத் தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
காய்கறித் தடையின்றி விநியோகம் (Unrestricted supply of vegetables)
நகரப்பகுதிகளை போலக் கிராமப்பகுதிகளிலும் காய்கறி விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
வேளாண்துறை அமைச்சர் (Minister of Agriculture)
அவரைத் தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியதாவது, தமிழகம் முழுவதும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் காய்கறிகள் பழங்கள் விநியோகம் செய்யப்படுவதாகவும், கிராமங்களில் மூன்று சக்கர வாகனங்கள் மூலம் காய்கறிகள் விநியோகம் செய்யப்படும்.
வாகனங்களில் விற்பனை (Sale in vehicles)
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் நாளில் சென்னையில் மட்டும் 1,670 வாகனங்களில் 1,400 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது.
குறைந்த விலையில் (At a low price)
பிற மாவட்டங்களில் மட்டும் 4,626 மெட்ரிக் டன் காய்கறிகள் 6,296 வாகனங்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பைத் தவிர்க்க (To avoid harm)
விவசாயிகளின் விளைப்பொருட்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேளாண்துறை அதிகாரிகள் மூலமாக நேரடியாகக் கொள்முதல் செய்து தேவைப்படக்கூடிய இடங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தட்டுப்பாடு அபாயம் இல்லை (There is no risk of shortage)
தமிழகம் முழுவதும் 23,900 ஹெக்டேர் பரப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விளைவிக்கப்பட்டு வருவதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க....
வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!
மீனவர்களுக்கு ரூ. 5000 நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!