Health & Lifestyle

Thursday, 27 June 2019 10:50 AM

அடிக்கடி நாம் கேட்கும் விஷயம் உடலில் கூடுதல் ஊட்டசத்து கிடைக்காததால் இரத்த குறைபாடு ஏற்படும் என்று. ஆனால் இன்றைய சூழலில் நல்ல திடகாத்திரமாக இருப்பவர்களுக்கு கூட  இரத்த சோகை ஏற்படுகிறது. எதனால் ஏற்படுகிறது? இதற்கான ஒரே பதில் நமது சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் குடல் சரியாக செயல்படாதது. உடலில் இவை மூன்றும் சரியாக செயல்படா விட்டால் ஏற்படும் விளைவுள் அதிகம் மற்றும் சிறிது சிறிதாக நோய்கள் உண்டாகத் தொடங்கிவிடும். இதன் அறிகுறியாக விரைவில் நரை முடி உருவாவது, நாள் முழுவதும் அசதி, தலை வலி, தூக்கம் இன்மை போன்றவை ஆகும். இந்த பிரச்சனை அதிகரிப்பதற்கு முன்பு கீழே குறிப்பிட்டுள்ள இந்த செய்முறை மற்றும் யோகாவை கடைபிடித்து வந்தால் விரைவில் உடலில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும் மற்றும் உடலில்  சுறுசுறுப்பு உண்டாகும்.

ஒரு டம்பளரில் 4 ஸ்பூன்(spoon) கற்றாழை ஜூஸ் (Aloe Vera Juice)

இதில் 2 ஸ்பூன் (spoon) எலும்பிச்சை சாறு சேர்க்கவும்

பின் 1 ஸ்பூன் (spoon) இஞ்சி சாறு சேர்க்கவும்

சுவைக்கு ஏற்றாற்போல் உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்

இப்பொழுது இந்த சாறை ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால்  உடலில் ஆரோக்கியம் அதிகரித்து சுறுசுறுப்பாக இருப்பதை உணர்வீர்கள்.

மேலும் இத்துடன் இந்த இரண்டு யோகாசன பயிற்சியையும் முயற்சிக்கலாம்.

அனுலோம விலோம பிராணாயாமம்

இது உடலுக்கு சிறந்த பயிற்சியாகும். மூக்கின் ஒரு துவாரத்தின் வழியாக மூச்சை நன்கு இழுத்து மற்ற துவார வழியாக வெளியே விடு வேண்டும். இதை தொடர்ந்து 3 இல் இருந்து 4 நிமிடம் வரை செய்யலாம். இதனால் மூச்சு குழாய் சீராவதோடு உடலின் உட்புற உறுப்புகள் பலம் பெறும்.

கபாலபதி

இந்த பயிற்சியில் நீங்கள் ஒரு இடத்தில் அமர்ந்து கண்களை மூடி வயிற்றில் கவனம் செலுத்த வேண்டும். மெது மெதுவாக மூக்கின் இரண்டு துவாரத்தின் வழியாக மூச்சை நன்கு இழுத்து பின் மூச்சை மூக்கின் வழியாகவே வெளியேற்ற வேண்டும். இந்த முறை புரியவில்லை என்றல் யூட்டியூபின் (you tube) உதவியை மேற்கொள்ளலாம். இதனால் வயிற்றில் குடல்கள் பலம் பெறும், கெட்ட கொழுப்புகள் குறையும், இவ்வாறு உடலை சுத்திகரிக்கும் நுட்பங்களை கொண்டது.

இம்முறைகளை மேற்கொண்டு உங்கள் உடலில் உள்ள இரத்த சோகையை போக்கி உடலை ஆரோக்கியமாகவும், பலமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

K.Sakthipriya
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)