மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 June, 2019 4:59 PM IST

நமது சித்த மருத்துவத்தில் எல்லா விதமான  பிணிகளுக்கும் மருந்துண்டு என்பது பெருபாலானோர் அறிந்ததே. அதே போன்று உடலை நோய்களில் இருந்து எவ்வாறு காப்பது, என்றும் இளமையாக இருப்பது எப்படி? என அனைத்து கேள்விகளுக்கும் சித்த மருத்துவத்தில் பதில் உண்டு.

இயற்கை நமக்கு அருளிய எண்ணற்ற கொடைகளில் மூலிகைகளும் ஒன்று. குறைந்த நீரில் அதிகமாக வளர கூடிய கற்றாழையினை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் அவற்றின் வெவ்வேறு வகைகள் அதன் மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதோ உங்களுக்காவே கற்றாழை பற்றி அறிவோம்.

நவீன உலகில் பெரும்பாலான அழகு சாதன பொருட்களை சந்தை படுத்துவதற்கு கற்றாழையினை மூலப்பொருட்களாக காட்டுகின்றனர். என்றேனும் நாம் யோசித்ததுண்டா? ஆம் வியாபார யுக்தி.. கற்றாழை அழகை மட்டும் கொடுக்காது... ஆரோக்கியம், குளிர்ச்சி என சொல்லிக்கொண்ட போகலாம்.  

கற்றாழை எனும் குமரி 

பொதுவாக கற்றாழையானது வெப்பம் நிறைந்த, நீர்வளம் குறைந்த பகுதிகளில் வளர கூடியது. நம்மில் உண்டாகும் பல நோய்களுக்கு மருந்து நம் நில பரப்பில், நம் அருகில் வளர கூடியதாகும். இதுதான் இயற்கையின் சூட்சுமம் ஆகும். கற்றாழையில் எண்ணிலடங்கா நன்மைகள் உள்ளன. நமது  உடலிற்குத் தேவையான வைட்டமின் சத்துக் கள் ஏராளமாக உள்ளன.  இது உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்றி உடலின் செல்களை உயிர்ப்புடன் செயல் பட வைக்கிறது.

கற்றாழையின் வகைகள்

  • சோற்றுக் கற்றாழை
  • சிறு கற்றாழை
  • பெரும் கற்றாழை
  • பேய் கற்றாழை
  • கருங்கற்றாழை
  • சிவப்புக் கற்றாழை
  • இரயில் கற்றாழை

செங்கற்றாழை கற்பம்

கொள்ளவே சிவப்பான கத்தாழைச் சோறும் 
கொண்டு வர மண்டலந்தா னந்தி சந்தி 
விள்ளவே தேகமது கஸ்தூரி வாசம் வீசும் 
வியர்வைதான் தேகத்தில் கசியாதப்பா 
துள்ளவே நரைதிரைக ளெல்லா மாறும் 
சோம்பல் கொட்டாவி நித்திரையுமில்லை 
கள்ளவே நாகமது உடம்பி லூறும்
கண்களும் செவ்வலரிப் பூப்போலாமே

                                                                      நந்தீசர் – ஞானம்

இதன் பொருள்  சென்குமரியினை உட்கொள்ளும் போது நமது  நமது உடலானது பல பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபடும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். உடலில் இருந்து வியர்வை வெளியேறாது, தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும்.(நரை,திரை)மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும். சோம்பல்,கொட்டாவி,தூக்கம் வராது.மனம் விழிப்பு நிலையில் நின்று “குண்டலினி” யோகம் சித்திக்கும்.

சிவப்புக் கற்றாழையின் தோற்றம்

செங்குமரி இதனை குமரி என்று அழைக்க காரணம் என்றும் இளமை தரவல்லது. செங்கற்றாழையில் இருந்து சித்தர்கள் காயகற்பம் என்னும் அருமருந்தினை தயாரித்தனர். இதன் மடல்கள் பசுமை கலந்த செம்மை நிறத்தில்  நல்ல சதைபற்றுடன்  இருக்கும். மடல்களில் மிகச் சிறிய வெள்ளைப் புள்ளிகளும்,  ஓரங்களில் சிவப்பு நிற முட்கள் காணப்படும். அதன் சதைப்பகுதி இரத்தம் போல் சிவந்து,  நாற்றம் இல்லாமல் வெள்ளரிக்காய் போல இருக்கும்.

சிவப்புக் கற்றாழையை உட்கொள்ளும் முறை

முதலில்  மேலே உள்ள தோல் பகுதியினை சீவி விட்டு வெறும் சதைப் பகுதியை மட்டும் எடுத்து ஏழு முறை நீரில் நன்கு அலசி விட்டு, பின் அதனை திரிகடுக (சுக்கு, மிளகு, திப்பிலி)  தூளில் பிரட்டி மென்று உண்ண வேண்டும். காலை, மாலை 48 நாள் உண்டு வந்தால் தீராத நோய் தீரும். குழந்தையின்மைக்கு இது ஒரு சிறந்த உபாயம்.ஒரு சர்வரோக நிவாரணி என்று கூட அழைக்கலாம்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Want To Be Younger And Longer: Then Know The Amazing Health Benefits Of Red Aloe Vera
Published on: 25 June 2019, 04:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now