மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 July, 2019 5:10 PM IST

தமிழர்கள் அனைவருக்கும் நெல்லிக்காய் என்றதும் நினைவுக்குவருவது அதியமான் மற்றும் ஔவையார் அவர்கள். நமது முன்னோர்கள், சித்தர்கள் என அனைவரும் கொண்டாட முக்கிய காரணம், எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. காய் அளவில் சிறியது எனினும் பலன் பெரிது எனலாம். 

நெல்லிக்காயின் சுவையும், நிறமும் நம் உடலுக்கும் கண்களுக்கும் புத்துணர்ச்சி தர வல்லது. நமது  ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிய நெல்லிக்காய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு ஆப்பிள் பழத்தில்  உள்ள சத்துகளைவிட ஒரு சிறிய நெல்லிக்காயில் நிறைந்திருக்கும் சத்துகள் அநேகம். எனவே தன ஏழைகளின் ஆப்பிள் என்று கூறுவர். வைட்டமின் சி-யின் இருப்பிடமே நெல்லிக்கனிதான். மற்ற எந்தக் காய்கறிகள், பழங்களிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின் சி இதில் நிறைந்துள்ளது.

ஒரு நெல்லிக்கனியில் வைட்டமின் ஏ, பி  மற்றும் சி ஆகியவையும் நிறைந்துள்ளன. கால்சியம் 50 மி.கி., பாஸ்பரஸ் 20 மி.கி., இரும்புச்சத்து 1.2 மி.கி என சத்துகளின் உறைவிடமாக இருக்கிறது.

தமிழகத்தை  பொறுத்தவரை நெல்லிமரம் இரு முறை பூக்கின்றன. புதுத்தளிர்கள் உருவாகத் துவங்கியதும் அதன் சந்துகளிலிருந்து பூக்களும் தோன்ற ஆரம்பிக்கும். பிப்ரவரி மாதத்தில் ஒரு முறையும்,  ஜூலை மாதத்தில் மற்றொரு முறையும்  பூக்கும். ஆனால் பிப்ரவரியில் அந்தளவிற்கு காய்கள் உருவாவதில்லை. இருப்பினும்  ஜூலையில் பூக்கும் சமயமே நிறைய காய்கள் தோன்றும்.

இரு வகையான நெல்லி கனியினை நாம் பயன்படுத்துவதுண்டு கருநெல்லி மற்றும் அருநெல்லி ஆகியனவாகும். துவர்ப்பும், புளிப்பும் சுவை கொண்ட நெல்லி கனியினை காயகல்பம் என்றும் கூறலாம். கனியை உண்டபின் நீர் அருந்தினால் சுவையாக இருக்கும். இதனால் தான் கிராமங்களில் பொது கிணறுகளில் நெல்லி மரத்தின் வேர்,  மர பட்டை போன்றவற்றை போட்டு வைப்பார்கள்.

நெல்லிக்கனியின் பலன்கள்

  • உடல் எடையை குறைக்க விரும்புவோர் தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றைக் குடித்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்கி ஸ்லிம்மாக முடியும்.
  • நெல்லிச்சாறு, பாகற்காய்சாறு சேர்த்துச் சாப்பிட்டால் தினமும் பருகினால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். அதேபோன்று ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல் பழப்பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் நீங்கள் இருக்கும் பக்கமே வராது.
  • தேனில் ஊறய காட்டு நெல்லிக்கனியை தினமும் சாப்பிட்டு வர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை உயருவதுடன் சருமம் பொலிவு பெறும்.
  • நெல்லியின் விதையினை நன்கு பொடி செய்து தேங்காய் எண்ணெய் உடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வர கேசம் பளபளப்பாகவும் கருமையாகவும் அடர்த்தியாகவும் இருக்க உதவும். இதன் காரணமாகவே இன்று பெரும்பாலான தலை சாயங்களில் நெல்லி விதை என்பது தவிர்க்க முடியாத மூலப்பொருளாகி விட்டது.
  • நெல்லிக்கனியை ‘காய கல்பம்’ என்று கூறுவார்கள்.இதன் கரணம் மரணத்தை தள்ளி போடவும், முதுமை வராது இருக்கவும் இது உதவுகிறது.  நம் முன்னோர்களும் ஆற்றும்  சித்தர்களும் தினமும் ஓர் நெல்லிக்கனி எனச் சாப்பிட்டு எளிதாக சத்துகளையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளனர்.
  • சுத்தமான நீரில் இரண்டு நெல்லிகனிகளை போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும். இவ்வாறு செய்யும்போது கண்ணுக்குச் சிறந்த மருந்தாகும்.

Anitha Jegadeesan
Krishi Jagran

 

English Summary: Want To Overcome Anti-aging? Check Out , Here Are Amazing And The Best Solution For You?
Published on: 26 July 2019, 05:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now