விருதுநகர் மாவட்டத்தில், குல்லூர்சந்தை, வெம்பக்கோட்டை நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க ஏலம் விடப்பட உள்ளதாகவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மீன்பிடி ஒப்பந்தம் (Fishing contract)
பொதுவாக, குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க ஏலம் விடப்படுவது வழக்கம். அவ்வாறு ஏலம் எடுக்கும் தனிநபரோ, நிறுவனமே, மீன்களைப் பிடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டிடுக்கொள்வதும் வழக்கம்.
இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
5 ஆண்டுகள் குத்தகை (Lease for 5 years)
மாவட்டத்தில் வெம்பக்கோட்டை மற்றும் குல்லூர்சந்தை நீர்த்தேக்கங்களின் மீன்பிடி உரிமைகளை 5 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் (Download)
அவ்வாறுக் குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள், அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தொடர்புக்கு (Contact)
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம், 114 ஆ 27/1 வேல்சாமி நகர், விருதுநகர் 626 001 என்ற முகவரியிலோ, அல்லது 04562 - 244707 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மீன் வளர்ப்புத் தொழிலை பெரிய அளவில் செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, வருமானம் ஈட்டமுடியும்.
மேலும் படிக்க...
தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு - தோட்டக்கலை துறை ஆலோசனை!!