அரியலூர் மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைக்க முன்வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைக்கவிரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலர்கள் மற்றும் உதவி விதை அலுவலரை தொடர்புக் கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுஉதவி இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
500 கிலோ மகசூலுக்கான சூத்திரம் (500 கிலோ மகசூலுக்கான சூத்திரம்)
-
நவீன தொழில்நுட்பங்கள்
-
சான்று பெற்ற விதையைப் பயன் படுத்துதல்
- உயிர் உரம்
-
பூஞ்சான விதைநேர்த்தி செய்தல், சரியான பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்
-
பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளித்தல்
மேற்கூறியவற்றை உரிய காலத்தில் கையாண்டால் ஏக்கருக்கு 450 முதல் 500 கிலோவரை மகசூல் பெறலாம்.
உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைத்து தரமானவிதை உற்பத்தி செய்து வேளாண் மைத்துறைக்கு வழங்கினால் உள்ளூர் சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் ஆகியவை சேர்த்து கூடுதல் லாபம் கிடைக்கும்.
தொடர்புக்கு (Contact)
எனவே, உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைக்க முன்வரும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...