பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 February, 2021 9:18 PM IST
Credit : Firstpost

பொங்கல் பண்டிகைக்கு இனிப்பாக சாப்பிட இனிக்கும் கரும்பு தான் ஸ்பெஷல். பொங்கல் என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது ஆறடியில் வளர்ந்து நிற்கும் கரும்பு (Sugarcane) தான். உலகில் அதிக அளவில் கியூபா (Cuba) நாட்டில் தான் கரும்பு விளைவிக்கப்படுகிறது. பொங்கல் திருநாளில் வீட்டில் கரும்பு வாங்கி கதிரவனுக்கு படைப்பது வழக்கம். சர்க்கரை மற்றும் வெல்லம் தயாரிக்கப்படும் கரும்பில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது.

மருத்துவ குணங்கள்:

  • குளிர்ச்சியூட்டும், மலமிளக்கியாக செயல்படும். சிறுநீர் பெருக்கியாக (Urine amplifier) செயல்படும். பித்தத்தை நீக்கும்.
  • சிறுநீர்க்கடுப்பை குணப்படுத்தும். குடல்புண், மூலம், வெட்டை சூடு இவைகளை குணப்படுத்தும். புண்களை ஆற்றும். கிருமி நாசினியாகவும் (Gems killer) பயன்படுகிறது.
  • கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு கலந்து அருந்த வலிப்பு குணமாகும்.
  • ஒரு கப் சாறுடன் சிறிதளவு வெல்லம், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும்.
  • வெல்லத்துடன் மஞ்சள் தூளை குழைத்து தீப்புண்கள் மேல் தடவ புண் ஆறும்.
  • கரும்பு சர்க்கரையும் சிலவகை மருத்துவக் குணங்களைக் (Medical Benefits) கொண்டதாகும். சர்க்கரை கலந்த நீரால் புண்களை கழுவி வர புண்கள் ஆறும்.
  • கரும்புச் சாறுடன், இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு கலந்து அருந்திவர பித்தம் குறையும். உள் சூடு, குடல்புண், மூலம் போன்றவை குணமாகும்.
  • கரும்புச் சாறுடன் சிறிதளவு தேன் (Honey), எலுமிச்சை சாறு கலந்து அருந்த மலச்சிக்கல் தீரும்.
  • கரும்பு கற்கண்டு தாதுவலிமையை கூட்டும். பாலில் கரும்பு கற்கண்டு, முருங்கைப்பூ சேர்த்து காய்த்து தினசரி இரவு ஒரு கப் சாப்பிட்டு வர தாது புஷ்டி ஏற்படும்.
  • தணலில் சர்க்கரையோடு சாம்பிராணிப் பொடி சேர்த்து புகைக்க கிருமிகள் அழியும், கரப்பான், கொசுத்தொல்லை மறையும்.
  • நீரில் கரும்பு வேரை இட்டு காய்த்து அரை கப் வீதம் இருமுறை குடிக்க சிறுநீர்க்கடுப்பு தீரும்.
  • சர்க்கரை கலந்த நீரால் கண்களை கழுவி வர புகையால் பாதிப்பான கண்கள் நலம் பெறும்.
  • தினசரி கரும்புச்சாறு (Sugarcane juice) பருகக்கூடாது. அப்படி தொடர்ந்து பருகினால் சளி, குடல்புண், வெட்டை சூடு, ஜலதோஷம், நீரிழிவு (Diabetes) ஏற்படும்.

தொகுப்பு: சா.அனந்தகுமார், கன்னியாகுமரி.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்

English Summary: We know the medicinal properties of sugar cane!
Published on: 05 February 2021, 09:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now