Health & Lifestyle

Tuesday, 22 February 2022 07:32 PM , by: R. Balakrishnan

Medicinal properties of barley rice

ஊட்டச்சத்து மிக்க பார்லி, உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது. சிறுநீரில் அழற்சி ஏற்பட்டால் பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக் கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினியையும் (1 அவுன்ஸ்) கலந்து உட் கொண்டு வந்தால் குணமாகும். பார்லி அரிசியில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையில் ‘டெக்ஸ்ட்ரீ’ என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன. இதில் கஞ்சி தயாரிக்கும் போது சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறி விடுகின்றன.

நன்மைகள் (Benefits)

பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன், அந்த கஞ்சியுடன் சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும்.

கெட்ட கொலஸ்ட்ராலை போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டா குளுக்கோஸ் என்ற நார்ச்சத்து இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் ‘பி’ நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக் கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.

கோதுமையிலும் ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்த போதிலும், ப்ராஸஸ் செய்யப்படும் போது சுவைகளிடமிருந்து நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன. ஆனால் பார்லியில் உள்ள நார்ச்சத்து எந்த வகையிலும் அழிவதில்லை. இதுதான் பார்லியின் சிறப்பு. இது உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

மேலும் படிக்க

உடல் எடையை குறைக்க தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம் தானா?

கண் நோய்கள் வராமல் தடுக்க மருத்துவரின் அறிவுரைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)