உடல் முழுவதும் உள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை தான். உடலுறுப்புகள் இயங்குவதற்கான கட்டளைகளை விதிக்கும் கண்ட்ரோல் ரூம் தான் மூளை என்றும் கூட கூறலாம். அப்படிப்பட்ட மூளையை நாம் செய்யும் சில செயல்களும், பழக்க வழக்கங்களும், அதனை பாதிப்படைய செய்ய வாய்ப்புள்ளது. அது என்னென்ன என்பதை அறிந்து கொண்டு, அதனை தவிர்ப்போம்.
தாமதமான தூக்கம் (Late Sleep)
இரவு நேரத்தில் தாமதமாக உறங்குவது என்பது எப்போதும் மூளையில் பாதிப்பை உருவாக்கும். ஏனென்றால், மூளைக்கு குறிப்பிட்ட நேர ஓய்வு தேவைப்படும். அந்த ஓய்வு நேரத்தை தராமல் விழித்திருப்பது மூளை மட்டுமல்ல கண்களுக்கும், உடலுக்கும் கூட ஆபத்துதான்.
புகைப்பழக்கம் (Smoking)
புகைப்பழக்கம் என்பது ரத்தத்தில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் தன்மை கொண்டது. புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும் போது, ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகமாகி மூளையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
துரித உணவுகள் (Fast food)
துரித உணவுகள் குளிர்விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், சுவை குறைந்து விடுகிறது. இதை தவிர்ப்பதற்காகவும், அதன் சுவையை தக்க வைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம் வண்ணங்கள் போன்றவை சேர்க்கப்படுகிறது. இது மனித உடலுக்கு ஊறு விளைவிக்க கூடியதாகும். ஞாபக சக்தி குறைவு, கவனக் குறைவு, திட்டமிட்டு செயல்படும் திறன் குறைவு போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்க்கரை (Sugar)
சர்க்கரையை அதிகமாக பயன்படுத்துவது மூளைக்கு தீங்கு விளைவிக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மூளையையும் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதிகமாக சாப்பிடுதல்
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல்பருமன் போன்ற உடல்நல பாதிப்புகளும் உண்டாகும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால், கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாவதும் மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும்.
தடிமனான போர்வை
நம்மில் சிலர் தடிமனான போர்வையால், தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு, உறங்குவதை வழக்கமாக வைத்திருப்போம். அவ்வாறு தூங்குவதால், சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜனின் அளவு குறைவதால், மூளையின் இயக்கத்திற்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க
சீரகத் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!
உடல் சூட்டைக் குறைக்கும் சப்ஜா விதைகளின் ஆரோக்கியப் பயன்கள்!