Drinking cloves with milk
சிறிதளவு கிராம்புகளை பாலில் சேர்த்து குடிப்பது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள ஆற்றல் பற்றாக்குறையை நீங்குகிறது. பாலில் கால்சியம், சோடியம், பொட்டாசியம் உள்ளதால், உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது.
பற்களுக்கு நன்மை (Good for Tooth)
கிராம்பு கலந்த பாலை உட்கொள்வது பற்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். அதோடு வாயின் துர்நாற்றம் நீங்கும்.
மலச்சிக்கல் பிரச்சனை
மலச்சிக்கல் பிரச்சனை தீர கிராம்பு (Clove) கலந்த பால் உட்கொள்வதும் நன்மை பயக்கும். இரவில் தூங்கும் முன் கிராம்பு கலந்த பாலை குடிப்பது அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.
பசியின்மை நீங்கும்
கிராம்பு கலந்த பால் உட்கொள்வது பசியை தூண்டும். கிராம்பில் துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், இரும்பு, சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் வைட்டமின்கள் (Vitamin) உள்ளன.
வரையறுக்கப்பட்ட அளவு
அதிக ஆரோக்கிய நன்மை உள்ளது என்பதற்காக, அதிக அளவில் உட்கொள்ள வேண்டாம். ஒரு நாளில், ஒரு கிளாஸ் பாலில் சிறிதளவு கிராம்புப் பொடியைச் சேர்த்தால் போதும். கிராம்பு கலந்த பாலில் சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.
மேலும் படிக்க