பாட்டி சொல்லி கேட்டிருக்கிறோம் இது உடலுக்கு நல்லது என்று . இந்த கம்பங்கூழை பார்த்தாலே ஓடுகிற நாம், நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று கம்பங்கூழை உண்டு தங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டன. கொளுத்தும் வெயிலில் உடல் சூட்டை தணிக்க கம்பங்கூழ் மிகவும் சிறந்தது.
இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மினெரல்ஸ், போன்றவை உள்ளன. விலை காரணமாக இளநீரை தினமும் பருக இயலாது ஆனால் கம்பங்கூழை நாம் வீட்டிலேயே செய்து தினமும் குடிக்கலாம்.
கம்பங்கூழை குடிப்பதால் கிடைக்கும் நண்மைகள்
இளநீருக்கு இணையாக உடல் சூட்டை தணிக்க கம்பங்கூழை தினமும் உண்பது மிகவும் நல்லது. தினமும் காலையில் கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் உள்ள சூட்டை குறைத்து உடல் வெப்பத்தை சீராக வைத்து கொள்கிறது. மற்றும் கம்பங்கூழ் உடனடி ஆற்றலையும் தருகிறது.
இதில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் உள்ள இரத்த அணுக்களை செயல்படுத்தி இரத்தம் அதிகம் சுரக்க உதவுகிறது. தினமும் கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இரத்தம் அதிகரித்து இரத்த சோகை நீங்கும்.
கம்பங்கூழை குடிப்பதால் அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். மேலும் கம்பங்கூழ் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுப்பதால் உடனடி பசி ஏற்படுவது குறைகிறது. இதில் உள்ள நார்ச்சத்து அதிக உணவு உட்கொள்வதை குறைத்து உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. மேலும் சரியான உடல் எடை இருப்பர்வகள் தினமும் கம்பங்கூழை குடித்தால் உடல் எடையை சமமாக, சீராக வைத்துக்கொள்ளலாம்.
கம்பங்கூழில் மெக்னீசியம் இருப்பதால் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வயிற்று வலி , மற்றும் வயிற்று பிடிப்பு சரியாகும். மேலும் உடல் சூட்டை தனித்து உடல் சோர்வு போக்குகிறது. இதனால் மாதவிடாய் காலங்களில் கம்பங்கூழை குடிப்பது மிகவும் நல்லதாகும்.
இரத்தத்தின் அடர்த்தியை மற்றும் உறைவை குறைத்து கரோனரி இதய நோயிலிருந்தும், பக்கவாதத்திலிருந்தும் தடுக்கிறது.
தூக்கம் இன்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இரவில் தூங்குவதற்கு முன் 1 டம்பளர் கம்பங்கூழை குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். தினமும் குடித்து வந்தால் தூக்கம் இன்மை பிரச்சனியில் இருந்து தீர்வு கிடைக்கும்.