Health & Lifestyle

Wednesday, 01 May 2019 03:02 PM

மணத்தக்காளி கீரையின் தண்டு, கீரை,பழம், அனைத்தும் சமையல் மற்றும் மருத்துவத்தில் பயன்படுகிறது. உடலுக்கு சத்துணவு பொருட்களை சரியாக அனுப்பிவிடுகிறது.  மணத்தக்காளி கீரையில் போஸ்போரஸ், கால்சியும், இரும்புச்சத்து, வைட்டமின் "எ", "பி" உள்ளது. 

மணத்தக்காளி கீரையின் மருத்துவ நன்மைகள்:

வாய்ப்புண், வயிற்றுப்புண் இவைகளை குணப்படுத்துவதில் சிறந்தது.  ஏனெனில் வயிற்றில் புண் ஏற்பட்டால்தான் வாயில் புண் வருகிறது. இதனால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் இரண்டுமே குணமாகிவிடும்.

கீரையை உணவாக சாப்பிட்டால் அன்றைக்கு முழுவதும் சாப்பிட்ட உணவுகளை நன்றாக செரிமானம்  செய்து விடும்.

மணத்தக்காளி கீரை உடல் வெப்பத்தை குறைக்கக்கூடியது.இதனால் உடலில் அதிக வெப்பம் காண்பவர்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலின்  வெப்பம் குறையும்.

காய்ச்சலால் ஏற்படும் உடல் வழிகளை, மற்றும் வேலை காரணமாக வரும் உடல் வழிகளை இந்த கீரை குறைக்கிறது.

மலச்சிக்கள், சிறுநீரகக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் பிரச்சனை, இவை அனைத்திற்கும் இந்த கீரை சிறந்த மருந்தாக உள்ளது. இந்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் பிரச்சனை குணமாகும். 

காச நோய் இருப்பவர்கள் இந்த மணத்தக்காளி கீரையின் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.

பெண்களுக்கு கருத்தரிக்கவும், உருவானக்கரு வலிமைப்பெறவும் இப்பழம் உதவுகிறது. மஞ்சள் காமாலை, கல்லீரல் போன்ற நோயிகளை குணப்படுத்த பழம் மற்றும் கீரையை வேகா வைத்து சாரைப் பருக வேண்டும்.

தோல் பிரச்சனையால் அவஸ்த்தை படுபவர்கள், சருமத்தில் ஏற்படும் புண்கள், அரிப்புகள் இவைகளுக்கு கீரையை சாராய் பிழிந்து தோள்கள்மேல் தடவி வந்தால் சீக்கிரம் குணமாகிவிடும்.

இரவில் இந்த மணத்தக்காளி கீரையை சாப்பிட்டால் நல்ல தூக்கம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் தினமும் இதை சாப்பிடலாம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)