Credit : Lifestyle
பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடியது. பப்பாளியில் அதிக மருத்துவ குணம் நிறைந்துள்ளது. சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனுடைய விளையும் மலிவானது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நிறம் கொண்டது. வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழம்.
பப்பாளி பழத்தின் நன்மைகள் :
நோய் எதிர்ப்பு:
பப்பாளி பழத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. ரத்தில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரித்து, நோய் தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
முகம் பளபளப்பு:
பப்பாளி பழத்தை முகத்தில் தடவி வந்தால் கண் கருமை, முகத்தில் சுருக்கம், நீங்கி முகத்தில் பளபளப்பு மற்றும் அழகு கூடும்.
சர்க்கரை வியாதி:
பப்பாளிபழம் சர்க்கரை, நீரிழிவு பிரச்சனையை குணமாக்குவதில் சிறப்பாக செயல் படக்கூடியது. இது ரத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, அவர்களின் உடல் சோர்வை குறைகிறது.
மாத விடாய்:
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வழிகள்,உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. மற்றும் ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாகவும், குறைவாகவும் இருக்கும் நிலையில் பப்பாளி இந்த பிரச்னையை குணப்படுத்துகிறது. எனவே பெண்கள் பப்பாளி (Papaya) சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.
Credit : Cooking Light
இதயம்:
பப்பாளி (Papaya) பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைத்து, இரத்த அழுத்தம் ஏற்படாமல் இதயத்தை பாதுகாக்க பப்பாளியில் உள்ள பொட்டாசியம் (Potassium) உதவுகிறது.
கல்லீரல்:
கல்லீரல் (Liver) வீக்கத்திற்கு பப்பாளி மிகவும் சிறந்த மருந்தாக உள்ளது. தினமும் காலை மாலை என இருவேளையும் பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகிவிடும்.
வயிற்று பிரச்சனைகள்:
வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பப்பாளி பழம் மிகவும் சிறந்து விளங்குகிறது. மலச்சிக்கல், செரிமான பிரச்சனை (Digestive problem), மூலநோயால் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகிவிடும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது.
நரம்பு தரள்ச்சி:
காலையில் தினமும் பப்பாளியை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி (nerve disorder) பிரச்சனை சீக்கிரம் குணமாகிவிடும். மற்றும் நரம்பு சம்பத்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டாகும்.
மேலும் படிக்க
சிறுநீரக பிரச்சினை உள்ளவர்களுக்காக நச்சுன்னு 4 டிப்ஸ!
பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்