Health & Lifestyle

Sunday, 14 November 2021 06:27 PM , by: R. Balakrishnan

Spinach - Side Effects

கீரைகள் ஆரோக்கியத்தின் மையமாக விளங்குகிறது. ஆனால் சில சமயங்களில் இந்த கீரை வகைகளை அதிகம் எடுத்துக்கொள்வதினால், அதிகளவில் பாதிப்புகளும் ஏற்படக்கூடும்.

ஊட்டச்சத்துக்கள்

கீரையில் (Spinach) ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் ஏ (Vitamin A), வைட்டமின் சி (Vitamin C), வைட்டமின் கே (Vitamin K), இரும்பு, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம், நார்ச்சத்து, பியூரின் மற்றும் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. நமது உடலுக்கு அளப்பரிய நன்மை பயக்கும் வகையிலான இந்த கீரை வகைகளையும் நாம் ஒரு அளவிற்கே பயன்படுத்த வேண்டும். கீரை வகைகளை அதிகளவு உட்கொண்டால், அது நமது உடலில் எதிர்மறை பாதிப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.

பக்க விளைவுகள்

Kidney Stone Problem: கீரை உள்ளிட்ட பச்சை காய்கறிகளில் அதிகளவில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இத்தகைய உணவு வகைகளை நாம் அதிகம் எடுத்துக் கொண்டால், அது நமது உடலில் கால்சியம் ஆக்சலேட்டாக படிகிறது. இதனால் ​சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் ஏற்படும்.

Digestion problems: நமது உணவில், அதிகளவில் கீரை வகைகளை சேர்த்துக் கொண்டால், அது நமது உடலில் வாய்வு பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது. கீரை வகைகளை, நமது உடல் செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது. இதன்காரணமாக, வளர்சிதை மாற்றம் தடைபடுகிறது.

எனவே கீரை வகைகளை, உங்களது காலை உணவின் ஒருபகுதி ஆகவோ அல்லது சாண்டவிச்சில் சேர்த்தோ உண்டு மகிழலாம். இது உங்களை நீண்ட நேரம் புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது.

மேலும் படிக்க

மழைக்கால நோய்கள்: குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
நீண்ட ஆயுளைப் பெற இதை சாப்பிடுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)