காலை முதல் இரவு வரை ஓயாது ஒலிக்கப்படும் ஒமிக்ரான் வைரஸ் வந்தால், என்னென்ன அறிகுறி காட்டும், எப்படி அடையாளம் கண்டுகொள்வது என்பது மிக மிக முக்கியம். ஏனெனில் இது ஒமிக்ரான் கொரோனா காலம்.
ஓயாத ஒமிக்ரான் (Oyata Omigron)
கோவிட்-19 என்றக் கொரோனா வைரஸின் மாறுபாடான ஒமிக்ரான், தற்போது உலக மக்களை அச்சத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
பாதிப்பு அதிகம் இருக்கும், மின்னல் வேகத்தில் பரவும், ஓமிக்ரானால் பாதிக்கப்படும் போது சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படக்கூடும்.
கீழ் முதுகில் வலி ஏற்பட்டால் கவனமாக இருங்கள். தலைவலியும் இதன் அறிகுறிதான், இப்படிப் பல விஷயங்கள் தீயாகப் பரவி வருகிறது.
ஓமிக்ரானின் அறிகுறிகள் (Symptoms of Omicron) மிகவும் லேசானவையாக உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொற்றை எளிதாக அடையாளம் காண முடிவதில்லை.
ஓமிக்ரானின் அறிகுறிகள் (Symptoms of Omicron)
-
சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் தும்மல் ஆகியவை குளிர்காலத்தில் பொதுவானவை.
-
ஆனால் இவை ஓமிக்ரானின் அறிகுறிகளாகவும் இருக்கலாம் என்பதால் புறக்கணிக்காதீர்கள்.
-
தொண்டையில் கரகரப்பு
-
ஓமிக்ரானால் பாதிக்கப்படும் போது சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படக்கூடும்.
-
கீழ் முதுகில் வலி
-
அதிகத் தலைவலி
-
இரவில் தூங்கும் போது அதிகமாக வியர்க்கும் பிரச்சனை ஏற்படலாம்
-
தசை வலி இருக்கக்கூடும்
-
இது தவிர, காய்ச்சல், சளி மற்றும் ருசி, வாசனை தெரியாத நிலை
கண்டுபிடிக்க வழி (Way to find out)
-
மூச்சுத் திணறல்
-
தொடர்ந்து நெஞ்சு வலி அல்லது அழுத்தம்
-
விழிப்பதில் அல்லது விழித்திருப்பதில் சிக்கல்
-
தோல் நிறத்தில் மாற்றம்
-
உதடு அல்லது நகத்தின் நிறத்தில் மாற்றம்
-
இந்த பிரச்சினைகள் ஏற்பட்டால், மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...