சிலருக்கு மதியம் முழு சாப்பாடு சாப்பிட்டதும் சிறுகுடலில் வாயுப் பிடிப்பு உண்டாகும். இது எதனால் ஏற்படுகிறது, இதற்கு தீர்வு என்ன எனப் பார்ப்போமா?
வாயுப் பிடிப்பு (Gas Trouble)
வாயுப் பிடிப்பு என்பது சிறுகுடலில் உணவு செரிமானத்தின்போது உண்டாகும் கோளாறு. நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் சுரக்கும் செரிமான அமிலத்தால் எரிக்கப்பட்டு குடலுக்குத் தள்ளப்படுகிறது. அமிலத்தின் வினையால் உண்டாகும் வாயு சிறுகுடல் வழியாக மலக்குடலை நோக்கிப் பயணிக்கும்.
அதீத கொழுப்பு, மாவு, வெற்று கலோரிகள் நிறைந்த உணவைச் சாப்பிடும்போது செரிமானம் தாமதமாவதுடன் செரிமான வாயுவின் அளவும் அதிகரிக்கும். இதனால் குடல் வீக்கம் ஏற்படும். இதனால் வயிற்று வலி, ஏப்பம், வாயுத் தொல்லை ஏற்படலாம். சில நேரங்களில் குடல் வீக்கத்தை அடுத்து இந்த வாயு அடிமுதுகில் தசைப்பிடிப்பை உண்டாக்கும். குறிப்பாக உடற்பருமனானவர்களுக்கு இந்த பிரச்னை அதிகரிக்கும்.
இந்த பிரச்னையில் இருந்து தப்பிக்க கார்பனேட்டட் பானங்களை அருந்துவது தவறு. இதற்கு பதிலாக சாப்பாட்டில் இஞ்சி, பூண்டு உள்ளிட்டவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் நார்ச்சத்து நிறைந்த கீரை வகைகள், பழங்கள் உள்ளிட்டவை வாயுத் தொல்லையைப் போக்கும். லெமன் டீ, கிரீன் டீ உள்ளிட்ட டீடாக்ஸ் பானங்களை அருந்திப் பலன் பெறலாம்.
மேலும் படிக்க
பட்டனை தட்டுனா தோசை வரும்: இணையத்தில் வைரலாகும் தோசை பிரிண்டர்!