சூரியன் முகத்தைத் தொடும் வரை, படுத்து உறங்கவிட்டு, அவசர அவசரமான எழுந்து, காக்காக் குளியல் போட்டு, அறக்க பறக்க ஆபீஸிற்கு செல்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.
உடல் தூய்மை (Physical cleanliness)
நாள்தோறும் குளிப்பதன் மூலம் உடலைத் தூய்மை செய்து கொள்வது நாம் பிறந்தது முதல் கற்றுக்கொடுத்த பாடம்.
டெக்னிக் இருக்கு (Be technical)
ஆனால் அந்தக் குளியலைக்கூட இன்று பலரும் சரியாக செய்வதில்லை. ஏனெனில் உடல் சூட்டைத் தணிப்பதற்காகத்தான் நாம் குளிக்கிறோம் என்பதையே மறந்துவிட்டோம். அவ்வாறு குளிப்பதற்கும் ஒரு டெக்னிக் இருக்கு. அதனைத் தெரிந்துகொண்டு குளித்தால், பல நோய்களுக்கு குட்பை சொல்லலாம்.
என்னது குளிப்பதுகூட டெக்னிக் இருக்கா... அவசர அவசரமா தண்ணியை வாரி தலைக்கு ஊற்றினா போச்சு என்று சிலர் நினைக்கக் கூடும். இயற்கை மருத்துவர்கள் குளிப்பதற்குகூட முறை இருக்கிறது என்கிறார்கள்.
விதிவிலக்கு (The exception)
மனிதர்களாகிய நாம் எப்போதும் பச்சைத் தண்ணீரில் மட்டுமே குளிக்க வேண்டும். இதில் விதிவிலக்குகள் என்பது, உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் காலங்களிலும், உடல் வாத பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே.
தற்காலத்தில் ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிப்பது என்பது அபூர்வமாகிவிட்டது. குளியல் எல்லாம், குறுகிய நான்கடிச் சுவர்களுக்குள் அடங்கிவிட்டது.
அதனால், காலையில் குளிக்கும்போது, பார்த்து குளிக்க வெந்நீரைப் பயன்படுத்தாமல், சாதாரண நீரையே பயன்படுத்த வேண்டும்.
குளிக்கும் முறை (Bathing method)
நீரை முதலில் காலில் இருந்து ஊற்றி, பிறகு தொடை மற்றும் இடுப்பில் அதிக நீர் ஊற்றி, தண்ணீரின் வெப்பநிலையை உடல் ஏற்க தயார் செய்தல் அவசியம். இதைத்தொடர்ந்து உடலில் மேல் பாகங்களில் தண்ணீர் ஊற்றலாம்.
சுவாசம் பாதிக்கப்படலாம் (Respiration may be affected)
அவ்வாறு இல்லாமல், தலையில் நேரடியாக தண்ணீரை ஊற்றினால், திடீர் குளிரினால் ஏற்படும் வெப்ப மாறுதலால், சுவாசம் பாதிக்கப்படும் நிலை உண்டாகலாம். இதன் விளைவாக, வாயல் மூச்சுவிடும் நிலை ஏற்பட்டு, உடல் இயக்கம் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டாகிவிடும. மேலும் குளிக்கும்போது எப்போதும், சிறிது நீரை உச்சந்தலையில் ஊற்றிவிட்டு, அதன்பின் குளியலைத் தொடங்குதல் நல்லது.
உடலில் தலைமைச் செயலகம் மூளைதான். காலில் இருந்து நீரை ஊற்றிக் குளித்து வரும்போது, உடலின் வெப்பம் மூக்கு மற்றும் கண்கள் வழியே வெளியேறும். மாறாகத் தலையில் ஊற்றிக் குளிக்கும்போது, உடலில் உள்ள வெப்பம் மற்ற பாகங்களின் வழியே வெளியே வர வாய்ப்பில்லாமல், தலையிலேயே சேர்ந்து உடல் சூட்டை அதிகரித்துவிடுகிறது.
இப்படி எத்தனை முறை குளித்தாலும், உடல் சூடு குறைவதில்லை. எனவே இதனைத் தவிர்க்க காலில் இருந்து குளியலைத் தொடங்க வேண்டும்.
இதை, ஆற்று நீரில் குளிக்கும்போது, நம்மால் எளிதில் உணர முடியும். முதலில் நம் கால்கள் நீரில் படுகின்றன. படிப்படியாகக் கால், இடுப்பு, மார்பு பின்னர் நீரில் தலை மூழ்கித் தானே குளிக்கிறோம்.
அத்துடன் ஆற்று நீரில் குளிக்கும்போது, வானில் உதிக்கும் சூரியனைப் பார்த்துக குளிக்க, உடலுக்கு அத்தியாவசியமான வைட்டமின் D நேரடியாக நம் உடலில் சேரவும் வாய்ப்பு உருவாகிறது. எனவே வாய்ப்பு கிடைத்தால், நீர்நிலைகளில் குளித்து அந்த அனுபவத்தையும் பெறுவோம்.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
சந்தையில் விற்பனையாகும் போலி இஞ்சி- கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!