கொரோனா வைரஸின் 3வது அலை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து படிப்படியாகக் குறைய வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மாபெரும் கேள்வி (Great question)
இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளின் மக்கள் மனதில் தற்போது எழுந்துள்ள பொதுவான ஒரு கேள்வி என்ன தெரியுமா? எப்போதுதான் கொரோனா நம்மிடம் இருந்து விடைபெறும், End card போடும். என்பதுதான். ஏனெனில் அந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு நம்மை நோகடித்துள்ளது.
உறவுகளை இழந்து பரிதவிக்கும் நபர்கள் ஒருபுறம், கொரோனா பாதிப்பால் உயிர்பிழைத்தாலும், ஆரோக்கியத்தை இழந்துவிட்டு, அதை அடையப் பல மாதங்கள் போராடும் மக்கள் மறுபுறம், இவ்வாறாகக் கொரோனா ஏற்படுத்தியுள்ளத் தாக்கங்கள் ஏராளம். இதனால் எப்போதுதான் கொரோனா முடிவுக்கு வரும் என்பது அனைவர் மனதிலும் எழுந்துள்ள பொதுவானக் கேள்வியாக மாறியுள்ளது.
படிப்படியாகக் குறையும் (Will gradually decrease)
இது குறித்து விளக்கமளித்துள்ள ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனீந்திர அகர்வால் கூறிகையில், அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் கெரோனா வைரஸின் 3வது அலை படிப்படியாக குறையும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 3வது வாரத்தில் இருந்து, நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொடும் எனக் கூறியுள்ள அவர், டெல்லி, கொல்கத்தா, மும்பை போன்ற பெரிய நகரங்களில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
40 ஆயிரம் வரை (Up to 40 thousand)
டெல்லியைப் பொறுத்தவரை தினசரி கொரோனா பாதிப்பு, 40 ஆயிரம் வரை எட்ட வாய்ப்புள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் கூறியுள்ளனர். தங்களின் கணிப்பின்படி பாதிப்புகள் எண்ணிக்கை இருந்தால் மார்ச் மாத நடுப்பகுதிக்குள் 3வது அலை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ள பேராசிரியகள், தேர்தல் பிரச்சாரங்கள், ரயில் பயணங்களால் இந்த கணிப்பு மாறுவதற்கும் வாய்ப்புள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.
விரைவில் முடிவு (Soon)
இதனிடையே, உலக அளவில் கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று, வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் டாக்டர் குதுப் மஹ்மூத், தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒரு தனித்தன்மை வாய்ந்த வைரஸ் ஆகும், ஏனெனில் இது மிக அதிக மாறுதல்களைக் கொண்டுள்ளது. கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும். இந்த ஆண்டில் தொற்றுநோயிலிருந்து மிக விரைவில் நாம் வெளிவருவோம் என்று நம்புகிறேன். அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாம் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு டாக்டர் குதுப் மஹ்மூத் கூறினார்.
மேலும் படிக்க...