பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 May, 2022 7:26 PM IST

பழங்கள் பற்றி நினைக்கும்போதே அதன் சுவை நம் நாவை வருட ஆரம்பிக்கும்.  அடுத்ததாக அதன் ஆரோக்கிய நன்மைகள் நம்மை ஆட்கொள்ளும். உடல் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துக்கள் மிக அவசியம். ஆகையால், அனைவரும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பலாப்பழத்தை உண்பது மிக அவசியமாகும். குறிப்பாகக் கோடை காலமே பலாப்பழத்தை உட்கொள்ள ஏற்ற காலமாகும். அதிலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கோடையில் பலாப்பழத்தை சாப்பிட வேண்டியது மிக முக்கியம். ஏனெனில் அது அவர்களுக்கு அதிகப்படியான நன்மைகளை அளிக்கின்றது.

தூக்கம்

தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகளிலும் பலாப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளது. இது உடலில் உள்ள நரம்பியக்கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தும். இது உங்கள் நரம்புகளை தளர்த்தி நன்றாக தூங்க அனுமதிக்கிறது. பலாப்பழத்தை அதிகமாக உட்கொள்வதன் மூலம் ஒருவருடைய சீரற்ற தூங்கும் பழக்கத்தை சரிசெய்ய முடியும்.

எலும்புகள் வலுவாக

பலாப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் உள்ளன. இவை எலும்புகளை வலிமையாக்குகிறது, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

சர்க்கரை

பலாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் வெளியீட்டு வேகத்தை குறைக்கிறது. இதன் காரணமாக, பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதிக சிரமம் இருக்காது.

நோய் எதிர்ப்புச் சக்தி

கோடை காலத்தில் பல பருவ நோய்கள் வர வாய்ப்புள்ளன. இந்த சூழ்நிலையில், பலாப்பழத்தை உட்கொண்டால், கோடை காலத்தில் வரும் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். ஏனெனில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், கோடை காலத்தில் அதிகமாக பலாப்பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.

எடை குறைய

பலாப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்தும் மிக அதிகம். பலாப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதுடன் உடல் எடையும் குறையும். பலாப்பழம் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க...

மக்களே ஜாக்கிரதை- கோடையில் இந்த பொருட்கள் ஆபத்து!

முந்திரி வடிவில் முட்டை-வியக்கவைக்கும் கோழி!

English Summary: Which fruit is beneficial for diabetics?
Published on: 28 May 2022, 07:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now