இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 September, 2022 10:31 PM IST

மாடுலர் கிச்சன்' வரவால் சமையல் அறை புதுப்பொலிவு பெற்றுவிட்டது. உண்மையில் அழுகுக்கு வைக்கப்படும் பொருட்கள் ஆரோக்கியத்தை அளிப்பதில் சற்று பின்தங்கியே இருக்கின்றன.பல்வேறு வகையான பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்தாலும் அவை பாதுகாப்பானதா? ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா? அல்லது தீங்கு விளைவிக்குமா? என்ற கேள்வி எழாமல் இல்லை. அந்த வரிசையில் சில பாத்திரங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைத்துத் தருகின்றன.

செம்பு

கிராமப்புறங்களில் இன்றளவும் குடிநீரைச் சேமித்து வைக்க செம்பு பாத்திரங்களை பயன்படுத்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. தாமிரத்தால் செய்யப்பட்ட இந்த பாத்திரங்கள் ஹீமோகுளோபினை அதிகரித்து, உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் ஆற்றலை கொண்டவை. செரிமானத்தை மேம்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கக்கூடாது. அதேபோல் செம்பு பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். இதையும் படியுங்கள்: தேனீ கொட்டினால் முதலில் செய்ய வேண்டியது.

எஃகு

உணவு பொருட்களை பரிமாறுவதற்கு பயன்படுத்தப்படும் பொருத்தமான உலோகங்களில் இதுவும் ஒன்றாகும். எஃகில் சேமிக்கப்படும் உணவுகள், எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடியவை. ஏனெனில் எஃகு எதிர்வினையற்ற பண்புகளைக் கொண்டது.

அலுமினியம்

இது பொருட்களை விரைவாக சூடாக்கும். இருப்பினும், அலுமினியத்தால் செய்யப்பட்ட பாத்திரங்கள் தக்காளி மற்றும் வினிகர் போன்ற அமிலத்தன்மை கொண்ட உணவுகளுடன் வினைபுரிந்து உணவில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே கவனமாக கையாள வேண்டும்.

கண்ணாடி

கண்ணாடியால் செய்யப்பட்ட பாத்திரங்களில் ரசாயனங்கள் கலந்திருக்காது. வாசனையோ, சுவையோ இருக்காது. எனவே கண்ணாடி பாத்திரங்களில் உணவு பொருட்களை சேமித்து வைப்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

வெள்ளி

வெள்ளி பாத்திரங்களில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதைப் பயன்படுத்துவது பித்த குறைபாடுகளை நீக்கும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்தும். மனநிலையையும் மேம்படுத்தும்.

பித்தளை

பித்தளை பாத்திரங்களில் ஈயம் பூசப்பட்டால் மட்டுமே அவை பயன்படுத்த ஏற்றவை. இந்த உலோகத்தை சூடாக்கும் போது உப்பு மற்றும் அமில தன்மை கொண்ட பொருட்களுடன் வினைபுரியும். எனவே பித்தளை பாத்திரங்களில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். பித்தளை பாத்திரங்களை உணவு பரிமாறுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதில் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்து கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

இரும்பு

இரும்பில் தயாரிக்கப்படும் தோசைக்கல், தவா போன்றவற்றை பயன்படுத்துவது உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் உதவும். செம்பு பாத்திரத்தை போலவே இதிலும் புளிப்பு தன்மை கொண்ட உணவுகளை வைக்கக்கூடாது. அவை எதிர் வினையாற்றலாம். காய்கறிகளின் நிறத்தை கருமையாக்கலாம்.

மேலும் படிக்க...

காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் நெய்!

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற டீ எது?

English Summary: Which Vessels do not cause side effects?
Published on: 22 September 2022, 10:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now