கரோனா உலகையே அச்சுறுத்தும் இவ்வேளையில், நமது சித்த மருத்துவர்கள் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு போன்றவற்றை பரிந்துரைத்து வருகிறார்கள். இந்தவகை மூலிகை நீர் தொற்றிலிருந்து பாதுகாக்கும் எனவும், நோயின் தன்மையை கட்டுப்படுத்துவதற்கு கைகொடுக்கும் என்றும் சித்தமருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பொதுவாக சித்த மருத்துவத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து உள்ளதாக முன்னோர்கள் கூறுவார்கள். நமது உடலில் தோன்றும் எவ்விதமான நோய் தொற்றாக இருந்தாலும் நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் குடிப்பதன் மூலம் நம்மை பாதுகாக்க இயலும்.
கபசுர குடிநீர் (kabasura kudineer)
யூகி முனி சித்தர் அவர்களால் உலகுக்கு அருளிய அருமருந்து இந்த கபசுர குடிநீர் ஆகும். இது பொதுவாக உடலில் தோன்றும் 64 வகையான காய்ச்சலுக்கு மருந்தாக கூறப்படுகிறது. காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும், வந்த பிறகு குணப்படுத்துவதற்கும் இதனை பயன்படுத்தலாம் என கூறியுள்ளர்.
மூலப்பொருட்கள் (Ingredients)
மிளகு, லவங்கம், ஜாதிக்காய், ஓமம், ஜபத்திரி, சித்ரமூலம், திப்பிலி, கருஞ்சசிரகம், கோஷ்டம், கோரோஜனை, நாவல் துளிர், மாந்தளிர்,வேப்பங்கொழுந்து, பூரம் போன்ற பொருட்களை சித்தர்கள் கூறிய அளவில் சேர்த்து நிழலில் உலர்த்தி சூரணம் போன்று தயாரித்து இம்மருந்தினை தயாரித்து உட்க்கொள்ளலாம். அல்லது பொடியை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளராக வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்து வர நோய் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்.
சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதனுடன் இனிப்புக்கு சுத்தமான தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து கொடுக்கலாம். கர்ப்பம் தரித்தவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
பொதுவான தடுப்பு மருந்து
நமது தமிழ் மருத்துவத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி என்று கூறப்படும் வேப்பிலை ஒன்று போதும். நமது சமையலைறையில் உள்ள மஞ்சள், சீரகம், மிளகு இவை அனைத்தையும் வைத்தே எளிய முறையில் வைரஸ் கிருமிகளிடமிருந்து நம்மை பாதுகாக்கலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.