நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகம் பேர் சாப்பிட நினைப்பது பாதாம் பருப்பு தான். ஆனால், எதுவாயினும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப பாதாம் பருப்பையும் அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது, சில எதிர்மறை விளைவுகளும் ஏற்படவே செய்கிறது.
பாதாம் நுண்சத்துக்கள் (micronutrients in Almond)
பாதாம் பருப்பில் புரதம் (Proteins), நார்ச்சத்து (Fibre), ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (Anti-oxidants), பொட்டாசியம் (Potassium), பாஸ்பரஸ் (Phosphorus), மக்னீசியம் (Magnesium), விட்டமின் E (Vitamin- E) போன்ற ஏராளமான ஊட்டச் சத்துகள் காணப்படுகிறது.
பல்வேறு சத்துகளை கொண்ட பாதம் பருப்பை நாம் அன்றாடம் சப்பிட்டு வர உடல் ஆரோக்கியமாகமாக இருக்கும் என்கின்றனர். ஆனால், இதனை அதிகம் எடுத்துக்கொண்டால் இதுவே உடலுக்கு தீக்கும் விளைவிக்கிறது.
தீமைகள் - Health Hazards
-
நார் சத்து கொண்ட பாதாமை அதிகம் சாப்பிட்டால் அது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்து கொள்ளும் இதனால் செரிமான கோளாறுகள் ஏற்படும்.
-
பாதாம் பருப்பில் உள்ள கூடுதலான மக்னீசியத்தால் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு 1.3 முதல் 2.3 மில்லிகிராம் மக்னீசியம் போதுமானதாக இருக்கும். உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் பாதாம் சாப்பிடக்கூடாது என்றும் கூறப்படுகிறது.
-
1 கப் பாதாமில் 25 மி.கி. விட்டமின் E இருக்கிறது. ஆனால், நம் உடலுக்கு நாள் ஒன்றுக்கு 15 மி.கி. விட்டமின் E போதுமானதாக இருக்கிறது. எனவே இதனை அதிகம் எடுத்துக்கொண்டால் தலைவலி, வயிற்றுப் போக்கு, உடற்சோர்வு உண்டாகும்.
-
பாதாமில் இருக்கும் கொழுப்பு காரணமாக இதனை நாம் அதிகம் எடுத்துகொள்ளவதால் நம் உடல் எடை அதிகரிக்கும்.
-
சிறு குழந்தைகள் மற்றும் சில வயதானவர்கள் விழுங்குவதில் சிரமம் உள்ளவர்கள் பாதாம் பருப்புகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது மூச்சுத் திணறல் போன்ற அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க...
நச்சுன்னு உடல் எடையைக் குறைக்கனுமா? உணவில் நெய் சேர்த்துக்கோங்க!
பலன்கள் பல அள்ளித் தரும் மஞ்சளின் மகிமைகள்!!