ஒரு மனிதன் எந்த காரணத்தால் இறந்து போகலாம் என்று கேள்வி இருந்தால் அதற்கு ஒரு சில காரணங்களை பட்டியலிடலாம். உதாரணமாக, இயற்கையான மரணம் அதாவது வயதாகி இறந்து போவது, நோய் காரணமாக இறப்பது, மற்றும் விபத்து ஆகிய மூன்றும்தான் முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் எதிர்பாராத நேரத்தில் என்ன காரணம் என்று தெரியாமல் மர்மமாக ஒரு சிலர் இறந்திருக்கிறார்கள். ஆனால், சிரிப்பதும் இறப்புக்கு காரணம் என்று தெரியுமா.?
பேசிக் கொண்டிருக்கும் பொழுது, விளையாடிக் கொண்டிருக்கும் போது, அல்லது நடக்கும் போது என்று சாதாரணமாக ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சிலரின் உயிர் பிரிந்திருக்கிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படும்.
உதாரணமாக, நியூஸ் சேனல் ரிப்போர்ட்டர் ஒருவர் கேமரா முன் பேசிக் கொண்டிருக்கும் போதே மயங்கி விழும் காட்சி உள்ள வீடியோ ஒன்று அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும். அது மயக்கம் அல்ல, அவர் இறந்து போவார். பல நபர்கள் இயல்பாக ஒரு விஷயம் செய்து கொண்டிருக்கும் பொழுதே அப்படியே உயிர் பிரிந்துவிடும். இதற்கு என்ன காரணம் என்று தெரியாது. விநோதமாக உயிர் பிரிவதற்கு அல்லது ஒரு நபர் இறந்து போவதற்கு எத்தனைக் காரணங்கள் இருந்தாலும், சிரித்தால் கூட ஒரு நபர் இறக்க நேரிடும் என்று அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
சிரிப்பதால் ஒருவர் இறந்து போக முடியுமா என்பது வினோதமாக, வேடிக்கையாக மட்டுமல்லாமல் அதிர்ச்சியூட்டும் விதமாகவும் இருக்கிறது. அப்படி என்றால் யாருமே சிரிக்க கூடாதா? வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று சொல்வார்களே ஆனால் வாய்விட்டு சிரித்தால் உயிர் போகும் என்று எங்கும் கூறப்படவில்லை! சிரிப்பால் எவ்வாறு மரணம் ஏற்படுகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
நமக்கு பிடித்தமான நகைச்சுவைத் தொடர்கள், வீடியோக்கள், தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் குட்டி ஃபன்னி கிளிப்ஸ் என்று பல்வேறு விதமான நகைச்சுவையான காட்சிகளை பார்த்து கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்போம். அவ்வாறு சிரிக்கும் பொழுது ஒரு சிலருக்கு உடலில் சில அதிர்வுகள் ஏற்பட்டு, தீவிர பாதிப்புகள் உண்டாகும். அதாவது தீவிரமான சிரிப்பு அல்லது கட்டுக்கடங்காத மகிழ்ச்சி மற்றும் மிகவும் ஸ்ட்ராங்கான எமோஷன் ஆகியவற்றை ஒரு நபர் எதிர்கொள்ளும் பொழுது இத்தகைய பிரச்சனைகள் ஏற்படும்.
அவர்கள் அறியாமலேயே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. கட்டுக்கடங்காமல் சிரிக்கும் பொழுது ஒரு சிலர் மயங்கிவிடுவார்கள். ஒருசிலருக்கு மூச்சடைத்து அல்லது மூச்சு விடுவதில் சிரமம் போன்ற நிலை ஏற்படும். வேறு சிலருக்கு உள்காயங்கள் உண்டாகும். அது மட்டுமின்றி நெக்ரோலெப்சி என்று கூறப்படும் தற்காலிகமாக தங்கள் சுயநினைவை இழந்து விடுவார்கள். எனவே சிரிப்பு என்பது கட்டுக்கடங்காத நிலையில் இருந்தால், இதய பாதிப்பு முதல் சுய நினைவு இழப்பது வரை பல பிரச்சனைகள் உண்டாகும். இதன் மூலம் ஒரு சிலருக்கு தீவிரமான மூளை பாதிப்பு ஏற்பட்டு, உயிர் பிரியலாம்.
மேலும் படிக்க:
ஒரே ப்ரீமியம் போதும்!! மாதம் 25,000 ஓய்வுதியம் பெறலாம் - எல்.ஐ.சி ஜீவன் அக்ஷய் திட்டம்!