வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பாராளுமன்றம் முன்பு 200 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் எதிர்ப்பு (Farmers protest)
வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல், டெல்லியில் உள்ள மாநில எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் உறுதி (Farmers commit)
அவர்களை முடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், சட்டங்களை வாபஸ் பெறும் வரைப் போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
இதற்குத் தீர்வு காணும் வகையில் மத்திய அரசு தரப்பில் விவசாயிகளுடன் நடத்தப்பட்டப் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், போராட்டம் நீடிக்கிறது.
22ம் தேதி போராட்டம் (Struggle on the 22nd)
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளைத் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் ஜூலை 22ம் தேதி முதல் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையும் வரை அங்குப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் (Parliament)
விவசாயிகள் அங்குப் போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, விவசாயிகளை வேறு இடத்தில் போராட்டம் நடத்த வலியுறுத்த ஏதுவாகக் காவல்துறை மூத்த அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
நிலைப்பாட்டில் உறுதி (Confirm position)
இது குறித்து பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயித் கூறுகையில்,
திட்டமிட்டபடி போராட்டத்தைத் தொடருவதில் விவசாயச் சங்கங்கள் உறுதியாக இருக்கின்றன. 2 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றம் முன்பு 200 விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
அமைதியான முறையில் (In a quiet manner)
இது அமைதியான போராட்டமாகவே இருக்கும். நாங்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே உட்கார்ந்து போராடுவோம், அதே நேரத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்