Health & Lifestyle

Tuesday, 25 May 2021 06:05 AM , by: Elavarse Sivakumar

Credit : IBC TamilNadu

இந்தியாவில் பலரும் கொரோனாத் தொற்றில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், சிலருக்குக் கறுப்புப் பூஞ்சை, வெள்ளை பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து அதனைவிட மோசமான மஞ்சள் பூஞ்சை தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.

பூஞ்சையால் உருவாகிறது (Formed by a fungus)

பூஞ்சைகளால் ஏற்படுகிற அரிதான நோய் தான் கறுப்புப் பூஞ்சைத் தொற்று. இது, பொதுவாக மண், தாவரங்கள், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிற ஒருவகை பூஞ்சையால் உருவாகிறது.

மூளை, நுரையீரலைத் தாக்கும் (Affects the brain and lungs)

மியூகோர்மைகோசிஸ் ( Mucormycosis ) என்று அழைக்கப்படுகிற கருப்புப் பூஞ்சை நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகிறது. இந்தத் தொற்று ஏற்பட்டால் முகம், கண் கீழ்ப்பகுதியில் வலி, வீக்கம், மூக்கடைப்பு, கண் மங்குதல் போன்ற அறிகுறி காணப்படும். இது குணப்படுத்திவிடக்கூடிய நோய் தான்.

ஸ்டீராய்டு மருந்துகள் (Steroid drugs)

நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு ஸ்டீராய்டு மருந்துகள் தரப்படுகின்றன. அவை நுரையீரல் வீக்கத்தை குறைப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு ஏற்படுத்தும் சேதங்களைத் தடுக்கின்றன.

சர்க்கரை அதிகரிக்கும் (Increase sugar)

அப்போது நோய் எதிர்ப்புச்சக்தியைக் குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடுகின்றன. குறிப்பாகச் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனால் மியூகோர்மைகோசிஸ் பிரச்னைக்கு ஆளாகலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மஞ்சள் பூஞ்சை (Yellow fungus)

இதற்கிடையே கறுப்புப் பூஞ்சையை விட மோசமான வெள்ளைப் பூஞ்சை தொற்று பீகார் மாநிலத்தின் பாட்னா நகரில் பதிவாகின. பிரபல மருத்துவர் உட்பட நால்வருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பாதிப்புகள் (Vulnerabilities)

இது நுரையீரல் மட்டுமின்றி நகங்கள், தோல், வாய் வயிறு, சிறுநீரகம், மூளை, பிறப்புறுப்புகளையும் பாதிக்கின்றன என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் அதைவிட மிக அதிக பாதிப்பை தரக்கூடிய மஞ்சள் பூஞ்சை தொற்றும் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒரு நபருக்கு இந்தத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள் (Symptoms)

சோம்பல், குறைந்த பசி, அல்லது பசியின்மை மற்றும் எடை இழப்பு.
சிலருக்கு, காயங்கள் மெதுவாக குணமாதல், காயங்களில் மஞ்சள் பூஞ்சை சீழ் கசிவு, உறுப்பு செயலிழப்பு மற்றும் கண்பார்வை மங்குதல்.

காரணங்கள் (Reasons)

மஞ்சள் பூஞ்சை தொற்று முக்கியமாக மோசமான சுகாதாரத்தால் ஏற்படுகிறது.
உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடத்தை முடிந்த அளவுக்குச் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

சுத்தத்தைப் பராமரிப்பு (Cleanliness maintenance)

பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்க உதவும் பழைய உணவுகள் போன்றவற்றை விரைவில் அகற்ற வேண்டும். கழிவறை சுத்தமாக வைத்திருத்தல் மிக மிக அவசியம்.

வீட்டின் அருகே அதிக ஈரப்பதம் இல்லாத வகையில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் அதிக ஈரப்பதம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
அபாயகரமான மஞ்சள் பூஞ்சை அறிகுறிகள் தென்பட்டவுடன், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது முக்கியமாகும்.

மேலும் படிக்க....

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் மரணம் - பாரத் பயோடெக் விளக்கம்!!

கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!

தமிழகத்தில் கொரோனா டாக்சி ஆம்புலன்ஸ் திட்டம்! மத்திய சுகாதாரத்துறை பாராட்டு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)