இசையைக் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது? எல்லோரும் எந்த விதமான மனநிலையிலும் பாடல்கள் மட்டுமே மனதிற்கு இதம் அளிக்கிறது. பாடல்களின் உற்சாகம், நமது மனநிலையை தீர்மாணிக்கின்றது. உற்சாகப் பாடல்கள், தத்துவ பாடல்கள், தற்போது சூப் சாங்ஸ் முதல் பார்ட்டி சாங்ஸ், என பாடல்களிலும் வேறுபாடுகள் பல வந்துவிட்டன. சரி தூங்குப் போது பாடல் கேட்டபதால் என்ன பிரச்சனை பாருங்கள்.
பலருக்கு தூங்கும்போதும் பாடல்களைக் கேட்கும் பழக்கம் உள்ளது. உங்களூக்கும் அந்த பழக்கம் இருந்தால், உங்களுக்கு தேவையானவை இந்த தகவலாகும். ஏனென்றால் தூங்குவதற்கு முன் பாடல்களைக் கேட்பவர்களின் தூக்கத்திலும், அவர்களுக்கு பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. தூங்கும்போது, இசை ஒலிப்பதை ஆப் செய்தாலும், நம் மூளையில், அது தொடர்ந்து ஒலித்துக் ஒண்டே இருக்கிறது என அவ்வாராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன. 'சைக்கலாஜிக்கல் சயின்ஸ்' இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
தூக்கம் பற்றிய ஆராய்ச்சி அமெரிக்காவில் உள்ள பேய்லர் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் நரம்பியல் இணைப் பேராசிரியரான மைக்கேல் ஸ்க்லின் என்பவரால் செய்யப்பட்டதாகும். தூக்கத்தில் இசை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் ஆராய்ச்சி செய்துள்ளார். ஒரு நாள் இரவு அவரது தூக்கம் திடீரென கலைந்துய் எழுந்ததாக, அவர் கூறினார், பின்னர் அவர் தூங்குவதற்கு முன்பு கேட்ட அதே இசை அவரது மூளையில் ஒலிப்பதையும், அவர் உணர்ந்தார். இதற்குப் பிறகுதான் அவர் இந்த விஷயத்தில் ஆராய்ச்சி செய்ய முடிவு செய்து, அதை செவ்வாணே நிறைவு செய்தார்.
பேராசிரியர் ஸ்க்லின் இது குறித்து கூறுகையில், இசையை விரும்பாதவர் இருக்க முடியாது எனவும், அதே நேரம் தூங்க முயற்சிக்கும் போது இசையைக் கேட்டால், அது மூளையை மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று அவர் கூறினார். இதனால் தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த ஆய்வில் 50 பேரிடம் சோதனை மேற்கொண்டார். ஆய்வுன் போது, தூங்கும் முன் பல வகையான இசையைக் ஒலிக்க செய்து, அதனால் தூக்கத்தில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்தார். தூங்கும் முன் அதிகமாக இசையைக் கேட்பவர்களின் தூக்கம் பாதிக்கப்படக் கூடும் என்பது, இந்த ஆய்வில் தெரிய வந்தது என்று அவர் கூறினார். இசையைக் கேட்கும் நேரமும் முக்கியம், அதனால் தூங்கும் முன் இசையைக் கேட்காதீர்கள் என்று அவர் அறிவுறுத்தினார்.
பின்பு நல்ல தூக்கத்திற்கு நாங்கள் என்ன செய்வது, இதற்கு பல வழிகள் உள்ளன. அதில் முதல் வழி, நாள் முழுவதும் நாம் என்ன செய்தோம், நம்மால் யாரும் பயனடைந்தனர், நமக்கு நடந்த நன்மைகள் என்னவென்று சிந்தியுங்கள். இதனால் அடுத்த நாள், நீங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும், நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:
பாரம்பாரிய முறையில் தக்காளி சாகுபடி செய்து, லாபம் ஈட்ட முடியுமா?
WFH செய்பவர்களே கவனிக்கவும்: Vi-இன் அதிரடி திட்டம் அறிவிப்பு