பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 26 February, 2022 10:44 PM IST

வேப்பமரம் என்றவுடனேயே நம் நாக்கில் அதன் கசப்புச்சுவை வந்துவிடுகிறது. வேப்பிலை போன்று இல்லாமல், வேப்பம் பூ ‘சிறுகசப்பு’ சுவையுடன் இருக்கும்.
வேப்பம் பூ ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், அதிக உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் வேப்பம் பூவில் உள்ளன.

வேம்பின் இலை, பூ, பழம், பட்டை, காய் என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயனுள்ளவை. வேப்பம் பூவுக்கு தென்னிந்திய சமையலில் முக்கிய பங்குண்டு. இதைக் கொண்டு ரசம், பச்சடி, குழம்பு தயார் செய்து சாப்பிடுவார்கள். வேப்பம் பூவிற்கு செரிமானத்தை அதிகப்படுத்தும் சக்தி உண்டு. இதை எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து சாப்பிடும்போது வாயுத்தொல்லை, வயிற்று வலி போன்றவற்றை குணமாக்கும்.

எடை குறைய


இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்தை சீராக்கும். குடல் இயக்கத்தை மேம்படுத்தும்.இதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்பட்டு குறைவாக சாப்பிட உதவும். எனவே எடை குறைப்பு எளிதாகும். மேலும் வேப்பம் பூவில் உள்ள மூலக்கூறுகள் அதிக கலோரிகளை எரிக்க உதவும்.

கொழுப்பு வளர்சிதை மாற்றத்திற்குக் காரணமான ஹார்மோனைத் தடுக்க வேப்பம் பூ உதவுகிறது. ஆகவே, வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, நீரில் ஊற வைத்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் பருமன் குறையும்.

வேப்பம்பூவை தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையில் மாற்றத்தைக் காண முடியும்.வேப்பம் பூவை உலர்ந்த நிலையிலும், பொடியாகவும் பயன்படுத்தலாம். இருந்தாலும் உடல் எடை குறைப்புக்கு பயன்படுத்தும்போது, புதிதாக பறித்த வேப்பம் பூக்களை பயன்படுத்துவதே சிறந்தது.

இது ரத்தத்தை சுத்திகரிக்க உதவுவதால், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உடலில் இருந்து வெளியேறும். உடலில் இருந்து நச்சுக்களை நீங்குவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...

புற்றுநோயைத் துவம்சம் செய்யும் 5 சூப்பர் உணவுகள்!

ஆயுளை அதிகரிக்கும் நெல்லி-சர்க்கரை நோயை அடியோடு விரட்டும் மந்திரசக்தி!

English Summary: You will lose weight right away - this is the magic!
Published on: 25 February 2022, 10:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now