Horticulture

Thursday, 29 October 2020 09:15 AM , by: Elavarse Sivakumar

இயற்கை விவசாயத்தில் மிகப்பெரிய சவால் எதுவென்றால், மண்ணை பண்படுத்துதல்தான். அதாவது தொடர்ந்து பயன்படுத்திய ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் கெட்டுப்போன மண்ணை, பொலபொலப்பானதாக மாற்றுவது மிக மிகக் கடினம்.

இந்த பணியை எளிதாக்க சிறந்த வழி ஒன்று உள்ளது. இதன்படி, கீழ்கண்ட 20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்து, அது முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும். இவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டுபோன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டு விடும்.

4 தானியங்கள்  (Pulses)

கேழ்வரகு, கம்பு, சோளம், திணை, சாமை

4 பருப்பு (Dall)

உளுந்து, கொள்ளு, பாசிபயிர், தட்டைபயிர்

4 எண்ணெய் வித்து (Oil seeds)

எள்ளு, ஆமணக்கு, நிலகடலை, சூரியகாந்தி

4 வாசனை பொருட்கள்

மல்லி, சோம்பு, வெந்தயம், கடுகு

4 உரச்செடி

அகத்தி, செனப்பு, பச்ச பூண்டு, நரி பயிறு, பனி பயிறு

செய்முறை

  • இந்த 20 வகை விதைகளை ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வீதம் கலந்து அவற்றில் பொடி வகைகளை மண் மற்றும் குப்பைகளுடன் சேர்த்து கொள்ளவும்.

  • நடுத்தர விதைகளை தனியாகவும் பெரிய விதைகளை தனியாகவும் 3 சுற்றுகளாக விதைத்தால் ஒவ்வொன்றும் முளைத்து வளரும்.

  • பாதி செடிகள் 60 நாட்களில் பூவைக்கும், அப்பொழுது இச்செடிகளை மடித்து உழுது மண்ணுக்கு உரமாக்க வேண்டும்.

  • அவ்வாறு செய்த செடிகளை 10 நாட்கள் அப்படியே விட்டால் அவை மக்கி விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாறுவதைக் காணலாம்.

மேலும் படிக்க...

மண் பரிசோதனை ஏன் அவசியம்?

100 புதிய இயற்கைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டுவருகிறது டிரைப்ஸ் இன்டியா நிறுவனம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)