நீலகிரியில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள, 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாய மாவட்டம் (Everyone can drink)
நீலகிரியின், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், கடந்த மூன்று ஆண்டுக்கு முன், அந்த மாவட்டம் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகள் அதற்கான நடைமுறைகளைக் கடைப்பிடித்து இயற்கை விவசாயம் மேற்கொள்வதைத் தோட்டக்கலை துறையினர் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
50 சதவீதம் (50 percent)
இதன்மூலம் மாவட்டம் முழுவதும், 50 சதவீதம் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறிவருவதைத் தோட்டக்கலைத் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
மானியம் (Subsidy)
அதே நேரத்தில் விவசாயிகளின் நலன் கருதி, மத்திய, மாநில அரசு, 50 முதல் 100 சதவீதம் வரை, வேளாண்மை திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.
உயர் ரக காய்கறி (High quality vegetable)
நீலகிரியின், இயற்கை விவசாயத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நடப்பாண்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலம், உருளைக் கிழங்கு, கேரட் மற்றும் உயர் ரக காய்கறி என, இயற்கை சாகுபடிக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இலக்கு (The goal)
இதில் முதற் கட்டமாக, 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறுகையில், நீலகிரியை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற, அரசு திட்டம் வகுத்துள்ளது.
3,500 ஏக்கர் இலக்கு (Target 3,500 acres)
தற்போது அதன் பணிகள் வேகம் பிடித்துள்ளது வரவேற்கத்தக்கது. முதற்கட்டமாக, ஊட்டி, முத்தோரை, பாலாடா உட்பட சில பகுதிகளில், 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!
கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!