விவசாயிகள் சூரிய ஒளி மின்வேலி அமைக்க 40 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதால், அதனைப் பெற விண்ணப்பிக்குமாறு வேளாண் பொறியியல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு திட்டம் (Federal Government Program)
தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு, விவசாயப் பயிர்களைப் பாதுகாக்கவும், உற்பத்தி பாதிக்காத வகையில் விளை பொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயைப் பெருக்கவும் கைகொடுக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலியினை 40% மானியத்தில் அமைக்க தேசிய வேளாண் அபிவிருத்தித் திட்டம்
2021-22ம் நிதியாண்டில் வேளாண்மை பொறியியல் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்களுக்கு பாதுகாப்பு (Protection for crops)
சூரிய ஒளி மின்வேலி அமைப்பதனால் விலங்குகள், வேட்டைக் காரர்கள் மற்றும் அன்னியர்களுக்கு மின் வேலியில் செலுத்தப்படும் உயர்மின் அழுத்தத்துடன் கூடிய குறுகிய உந்துவிசை மின் அதிர்ச்சியினால் அசௌகரியம் ஏற்படும்.
இதன் மூலம் பயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன், விளை பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்படாமலும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பில்லாமலும் விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.
எனவே விவசாயிகள் தங்கள் நில பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5 வரிசை (ரூ.282/(மீ) 7 வரிசை (ரூ.313/மீ) அல்லது 10 வரிசை (ரூ.360/மீ) அமைப்பினை தெரிவு செய்து கொள்ளலாம்.
தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் அல்லது 566 மீட்டர் மின் வேலி அமைக்க மானியம் வழங்கப்படும்.மேலும் சூரிய ஒளி மின் வேலி அமைப்பிற்கான மொத்த செலவுத் தொகையில் 40% பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் (Required Documents)
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், வரைபடம், ஆதார் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம் ஆகியவற்றுடன் கீழ்க்கண்ட அலுவலகத்தை உடனடியாக அணுகிப் பயன்பெறலாம்.
தொடர்புக்கு (Contact)
செயற்பொறியாளர் அலுவலகம், தொடர்புக்கு : 94436 36835, 04342-296948, உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், தர்மபுரி, தொடர்புக்கு : 94432 67032, 04342-296132,உதவி செயற்பொறியாளர் அலுவலகம், வேளாண்மை பொறியியல் துறை, ஒழுங்குமுறை விற்பனை கூடம், கச்சேரி மேடு, அரூர், தொடர்புக்கு: 94420 07040, 04346-296077 தொடர்பு கொள்ளலாம்.
தகவல்
ச.திவ்யதர்சினி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
மேலும் படிக்க...
4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!