தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பவியல் மாணவர்களுக்கான 5 நாள் திசு வளர்ப்புப் பயிற்சி துவங்கியுள்ளது.
அரசுகள் நடவடிக்கை (Governments Actions)
இந்திய இளைஞர் சக்தியை பல்வேறு பொருளாதார மேம்பாட்டிற்கு உபயோகப்படுத்த ஏதுவாக மத்திய மற்றும் மாநில அரசுகள் வெவ்வேறு திட்டங்களைத் தீட்டிவருகின்றன.
குறிப்பாக, நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு உயிர் தொழில்நுட்பவியல் வணிக நிறுவனங்களை ஊக்குவித்து அதன் வர்த்தகத்தை பல்லாயிரம் கோடிகளுக்கு உயர்த்துவதை ஒரு முக்கிய குறிக்கோளாக அரசு செயல்படுத்தி வருகிறது.
திறன் மேம்பாட்டு நிதி (Skill Development Fund)
இவற்றின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு வகையான திறன் போட்டு திட்டங்களை இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு நிதியுதவியுடன், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு செயல்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தாவர அறிவியல் மற்றும் உயிர்தொழியதுட்பவியல் மையமும், வேளாண் வணிக இயக்குனரகமும் இணைந்து உயிர் தொழில் நுட்பவியல் இளமறிவியல் மாணவர்களுக்கு தாவர திசு வளர்ப்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சியினை அளித்து வருகிறது.
இதற்காக, பெங்களுரைச் சேர்ந்த திசு வளர்ப்புத் திட்டங்களில் பத்து வருடங்களுக்கும் மேலாக அனுபவம் பெற்ற இஎன்எஸ் இன்ட்ஸட்ரூமென்ட்ஸ் நிறுவன உரிமையாளர் சாபுதாமஸ், அவர்களின் பங்களிப்புடன் 5 நாள் பயிற்சி துவங்கியுள்ளது.
பிப்.5 வரை பயிற்சி (Training)
வரும் 5ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. இதன் துவக்க விழாவில் வேளாண்மைத்துறை முதன்மையர் முனைவர் மா.கல்யாணசுந்தரம், தோட்டக்கலைத்துறை முதன்மையர் முனைவர் இல. புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, உயிர் தொழில்நுட்பம் மற்றும் தாவர திசு வளர்ப்பு வணிகத்தின் வீச்சையும், அவற்றின் வியாபார அனுகூலங்களையும் மாணவர்களுக்கு விளக்கினர்.
மேலும் படிக்க...
அடர்வனம் அமைக்கும் திட்டம் - இணைய அழைப்பு!