Horticulture

Tuesday, 24 November 2020 12:24 PM , by: Elavarse Sivakumar

Credit : Facebook

தேனி மாவட்டத்தில் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு அரசு சாா்பில் 50 சதவீதம் மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அழகுநாகேந்திரன் கூறுகையில்,

  • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சாா்பில், பயறு வகை பயிா் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் நெல் வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்வதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

  • 120 நாள்கள் அறுவடை பருவமுள்ள நெல் வயல் வரப்புகளில், அதே பருவத்தில் 70 நாள்களில் அறுவடையாகும் உளுந்து சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

  • மேலும், வயல் வரப்பில் உள்ள உளுந்து பயிா் நெல் பயிரில் தீமை விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க உதவுகிறது.

  • அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிா்களை வயலில் தளை உரமாகவும் பயன்படுத்தலாம்.

  • வயல் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், அரசு மானியம் பெறுவதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள உதவி வேளாண்மை அலுவலா்களைத் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா்.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!

PM SVANidhi Mobile App மூலம் ரூ.10ஆயிரம் உடனடிக் கடன்-ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)