Horticulture

Sunday, 02 May 2021 10:11 AM , by: Elavarse Sivakumar

திருப்பூர் மாவட்ட விவசாயிகள், 50 சதவீத மானியம் பெற்று, பாசன கட்டமைப்பை நிறுவ முன்வரவேண்டும் எனறு தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீர் பாசனத்திட்டம் (Water Irrigation Project)

திருப்பூர் மாவட்டத்தில், நுண்ணீர் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் விவசாய நீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், குழாய் கிணறு மற்றும் துளை கிணறு அமைக்கவும், தண்ணீர் இறைக்க ஆயில் இன்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன குழாய் பதிக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.

அதேநேரத்தில் இந்தத் திட்டத்தில், பாசன நீர் வீணாவதைத் தவிர்க்க, குழாய் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்ல வழிகாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:

ரூ.15,000 (Rs.15,000)

நுண்ணீர் பாசனம் அமைத்து, புதிய மின்மோட்டார் அல்லது டீசல் பம்ப் செட் நிறுவவும், 50 சதவீத மானியம் அல்லது, 15 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.

ரூ.10,000 (Rs.10,000)

நீர் பாசன குழாய் அமைக்க, 50 சதவீத மானியமும், ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமலும் மானியம் கிடைக்கும்.

50 சதவீதம் மானியம் (50 percent subsidy)

பாதுகாப்பு வேலியுடன், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டவும், 50 சதவீதம் அல்லது கன மீட்டருக்கு 350 ரூபாய்க்கு மிகாமல் மானியம் வழங்கப்படும்.

ரூ.40,000 (Rs.40,000)

அதாவது, ஒரு விவசாயிக்கு, 40 ஆயிரத்துக்கு மிகாமல், மானியம் ஒதுக்கப்படும்.மத்திய அரசு மானியம், நுண்ணீர் பாசன முறையைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு மட்டும் மானியம் வழங்கப்படும். எனவே இவற்றைப் பெற விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

வறட்சிகாலத்தில் பயிருக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் உரங்கள்!!

மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து வேளாண் அலுவலர் விளக்கம்!

மதுரையில் தரிசாகும் விவசாய நிலங்கள்! பயிருக்கு விலையும் இல்லை! களையெடுக்க ஆளிமில்லை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)