உலகிலேயே அதிக நச்சுள்ள தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ள இந்த தாவரம், சயனைடை விட 6 ஆயிரம் மடங்கு நச்சு மிகுந்தது.
ஆமணக்கு வகை
இங்கிலாந்தில் உள்ள பூங்காவில் இந்தக் கொடியத் தாவரம் வளர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ரசினஸ் கம்யூனிஸ்' என்று அழைக்கப்படும் இந்த தாவரம் ஆமணக்கு வகையை சேர்ந்தது. உலகின் மிக நச்சுத்தன்மை வாய்ந்த தாவரமாக கின்னஸ் புத்தகத்தில் பெயரிடப்பட்டது.
அதிர்ச்சி நச்சு
இங்கிலாந்தின் கொல்வின் விரிகுடாவில் உள்ள குயின்ஸ் கார்டன்ஸ் பூங்காவில் 'ரிசினஸ் கம்யூனிஸ்' தாவரம் இருப்பதை பெண்மணி ஒருவர் பார்த்து செல்போனில் படம் பிடித்து, தனது கணவருக்கு அனுப்பி உள்ளார். அப்பெண்ணின் கணவர் அந்த தாவரத்தின் நச்சுத்தன்மையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த தாவரங்களை கையுறைகளால் கையாள வேண்டும். 'ரிசினஸ் கம்யூனிஸ்' தாவரத்தின் விதைகளின் நுகர்வு மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறினார்.
பின்பு, அவர் பூங்கா நிர்வாகத்தை தொடர்புகொண்டு அந்த தாவரத்தை அகற்றுமாறும், எச்சரிக்கைப் பலகைகளை நிறுவுமாறும் பரிந்துரைத்தார்.
மேலும் படிக்க...