Horticulture

Wednesday, 16 June 2021 10:05 PM , by: Elavarse Sivakumar

Credit : Dinamani

வேளாண் காடுகள் திட்டத்தில், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க, 70,000 மரக்கன்றுகள் மேட்டுப்பாளையத்தில் தயார் நிலையில் உள்ளன.

பஞ்சம் ஏற்படும் அபாயம் (Risk of famine)

மரமில்லையேல் மழை இல்லை. மழை இல்லையேல் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லையென்றால் உணவுக் கிடைக்காமல் நாம் அனைவரும் பஞ்சத்தின் பிடியில் சிக்கித்தவிக்க நேரிடும். அதனால்தான் கொரோனா காலத்திலும், வனத்துறையினர் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வருகின்றனர்.

மரக்கன்று உற்பத்தி (Sapling production)

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், வனத்துறை சோதனைச் சாவடி அருகே, வனவியல் விரிவாக்க கோட்ட மையம் உள்ளது. இங்கு, வனப்பகுதிகளில் நடுவதற்கும், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கும், மரக் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

70,000 மரக்கன்றுகள் (70,000 saplings)

இது குறித்து, வனச்சரக அலுவலர் பாஸ்கரன் கூறுகையில், வேளாண் காடுகள் திட்டத்தில், விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுப்பதற்காக, தேக்கு, மலைவேம்பு, செம்மரம், வேங்கை, மகாகனி, நீர்மருது, வாகை, சந்தனம் உள்ளிட்ட வகைகளில், 70,000 மரக் கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இலவசமாக விநியோகம் (Free distribution)

  • ஊரடங்கு முடிந்த பின்பு வன அதிகாரிகள் உத்தரவின்பேரில், விவசாயிகளுக்கு இலவசமாக மர நாற்றுகள் வழங்கப்படும்.

  • ஏக்கருக்கு, 200 மரக்கன்றுகள் நடுவதற்கு நாற்றுகள் வழங்கப்படும்.

முன்பதிவு அவசியம் (Booking is required)

தேவையான விவசாயிகள், கோவை வனவியல் விரிவாக்க அலுவலகத்தில், தங்களது பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

தொடர்புக்கு (Contact)

பெற்றுக்கொள்ள விரும்புவோர், 0422 2434345, 97872 37131 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!

4941 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம்! மத்திய அரசு தகவல்!

பள்ளிகள் தற்போது திறக்கப்படாது! பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)