தூத்துக்குடி மாவட்டத்தில் உரங்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அதிரடி எச்சரிக்கைப் பிறப்பித்துள்ளது.
மானாவாரி சாகுபடி (Rainfed cultivation)
இது தொடர்பாக ஆட்சியர் சி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் சுமார் 1,70,000 எக்டேர் பரப்பில். மானாவாரி சாகுபடியாக மக்காச் சோளம், சோளம், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்து பயிர்கள் மற்றும் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது.
இந்தப் பயிர்கள் தற்சமயம் நன்கு வளர்ந்து மேலுரம் இட வேண்டிய பருவத்தில் உள்ளது.
விவசாயிகள் குற்றச்சாட்டு (Farmers blame)
இந்நிலையில், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உரக்கடைகளில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், உரங்களோடு சேர்த்து மற்ற இடுபொருட்களையும் வாங்க வேண்டும் என உரக் கடைக்காரர்கள் நிர்பந்தப்படுத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
புகாரினைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின் பேரில் உரக்கடைகளில் விற்பனை செய்யட்டும் உரங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலை விபரங்கள் மற்றும் உர விலை தொடர்பாகப் புகார் அளிக்கத் தொலைபேசி எண்கள் வெளிடப்பட்டுள்ளன.
ஸ்டிக்கர் வெளியீடு (Sticker release)
புகார்களுக்கு புகார் அளிக்க விரும்புபவர்கள், தொடர்பு கொள்ள வேண்டியத் தொலைப்பேசி எண்கள் குறித்த தகவல் அடங்கிய ஸ்டிக்கர் மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்டது.
இந்த ஸ்டிக்கர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் விவசாயிகள் பார்வையில் படும் படி ஒட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விற்பனையாளர்கள் யூரியா உரம்
இந்த ஸ்டிக்கரில் உர விற்பனையாளர்கள் யூரியா உரம் 45 கிலோ மூட்டையினை ரூ.266.50க்கும், டி.ஏ.பி உரம் 50 கிலோ மூட்டை ரூ.1200க்கும் மற்ற உரங்களை உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமலும் விற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் (Aadhar number)
விவசாயிகள் உரம் வாங்கும் போது கண்டிப்பாக தங்கள் ஆதார் அட்டையினை கொண்டு விற்பனை முனையக் கருவியின் மூலம் பில் போட்டு, பில் தொகையினை செலுத்தி உரக்கடைகளில் இரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புக்கு (For Contact)
உரக்கடைகளில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், தூத்துக்குடிக்கு 0461-2340678 என்ற தொலைப்பேசி எண்ணிலோ அல்லது வேளாண்மை உதவி இயக்குநர், தரக்கட்டுப்பாட்டிற்கு 9655429829 என்ற கைப்பேசி எண்ணில் புகார் அளிக்கலாம்.
அல்லது தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரிடம் நேரிலோ புகார் தெரிவிக்கலாம். எனவும், விதிகளை மீறி செயல்படும் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...
கரிசனம் காட்டாத கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் !