இராமநாதபுரம் மாவட்டம், கல்லல் வட்டாரத்தில் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வீதம் 5 ஏக்கர் வரை வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் நலன்கருதி பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, காய்கறி பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களுக்கு தட்டுப்பாடின்றிக் காய்கறிகள் கிடைக்கும் விதமாகவும், விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பிரியங்கா கூறியதாவது, காய்கறி பயிரிடுவதை ஊக்குவிக்கும் விதத்தில், கத்தரி, மிளகாய், தக்காளி, பீர்க்கை, வெண்டை, புடலை பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
விதை நடவு செடிகளின் பில், அடங்கல், சாகுபடி நிலத்தின் புகைப்படம் போன்ற விபரத்துடன் விண்ணப்பிக்கலாம். இதில் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
தைராய்டு பிரச்னை வராமல் தடுக்கும் செம்பு பாத்திரம்! 10 மருத்துவப் பயன்களின் பட்டியல் இதோ !
பைசா செலவில்லாமல் இயற்கை உரங்கள்- சமயலறைக் கழிவுகளில் இருந்து! தயாரிப்பது எப்படி?