Horticulture

Wednesday, 04 September 2019 04:37 PM

மண்புழு விவசாகிகளின் நண்பன் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. மண்வளம் பேணவும், வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகளை முறையாக பயன்படுத்தவும் மண் புழுவின் பங்கு இன்றியமையாதது.  இந்த மதிப்புள்ள மூலப்பொருள்களை முறையாக மட்கவைப்பதின் மூலம் நமக்கு இயற்கை உரம் கிடைப்பதுடன் வளம் குன்றிய மண்ணை அதிக செலவில்லாமல் பேணிக்காக்கா முடியும்.

இன்று இயற்கை விவசாயத்தை நாடுவோர் மண்புழு உர தயாரிப்பினையே பெருமளவில் பயன்படுத்துகின்றனர். ஒரு சிலர் இதனை பெரிய அளவில் வியாபாரம் செய்து அதிக லாபம் ஈட்டு வருகின்றனர்.

குறைந்த முதலீட்டில் அவரவர்களின் இட வசதியை பொறுத்து இல்லங்களிலேயோ அல்லது வயல்களிலோ, காலி இடங்களிலோ தங்கள் வயலுக்கு தேவையான மண்புழு உரத்தினை சுலபமான முறையில் சில்பாலின் தொழில் நுட்பம் மூலம் தயாரிக்கலாம்.

மண்புழு உரம் தயாரிக்கும் முறை

  1. உரம் தயாரிக்க விளை நிலங்கள்,தோட்டம் ஆகிய இடங்களில் நிழலான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  2. நிழலான இடத்தில் 15 அடி நீளமுள்ள மூங்கில் கம்பு நான்கை நட்டு,பாலிதீன் பையை சுற்றி தொட்டி போன்ற அமைப்பில் உருவாக்க வேண்டும். அல்லது பாலிதீன் வகையில் சில்பாலின் என்ற பிளாஸ்டிக் பை ஒன்றை 12 அடி நீளம்,4 அடி அகலம், 3 அடி உயரம் என்ற அளவில் தயார் செய்து கொள்ள வேண்டும்.
  3. இந்த  பிளாஸ்டிக் பையினுள் ஒரு டன் அளவுள்ள மாடு, பன்றி, ஆடு, வாத்து கழிவுகளும், பருத்தி, வைக்கோல், சோளம், கருப்பு தோகை, இலை தழைகள், சமையலறை கழிவுகள் ஆகியவற்றையும், சாணம் மற்றும் கழிவுகள் தலா ஒரு அடுக்கு என்ற முறையில் 6 அடுக்குகளாக போட்டு நிரப்ப வேண்டும்.
  4. தொட்டியின் மேல் பகுதியை தென்னை அல்லது பனை ஓலைகள் அல்லது கோணிப்பைகள் கொண்டு மூடி வைக்க வேண்டும். சாக்கு அல்லது நைலான் வலை கொண்டு மூடி, விலங்குகள் மற்றும் பறவைகள் கிளறா வண்ணம்  பார்த்துக்கொள்ள வேண்டும்.
  5. காலை, மாலைகளில் என இருவேளைகளில் ஈரப்பதம் வரும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  6. டன் ஒன்றுக்கு 1 கிலோ மண்புழுகள் விதம் போட்டு வைத்தால் 45 நாட்களில் உரம் உருவாகும்.
  7. இவ்வாறு செய்வதன் மூலம்  600 கிலோ மண்புழு உரம் தயாரிக்க முடியும். இதற்கான முதலீடு வெறும் 800 ரூபாய் மட்டுமே.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)