Horticulture

Tuesday, 05 October 2021 10:26 AM , by: Elavarse Sivakumar

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் வளா்ச்சித் திட்டம் (Agricultural Development Program)

கபிலா்மலை வட்டாரத்தில் சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 2021-22ஆம் ஆண்டிற்கு தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நீண்டகால தரிசு நிலங்களை பயன்படுத்தி சாகுபடிக்கு ஏற்ற விளை நிலங்களாக மாற்றி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

தரிசு நிலங்கள் (Barren lands)

இதற்காகக் கபிலா்மலை வட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளாக சாகுபடி செய்யப்படாமல் தரிசாக உள்ள நீண்ட கால இதர தரிசு நிலங்கள் கண்டறியப்பட உள்ளன.

இந்த நிலங்களைச் சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக ஒரு தொகுப்பிற்கு 25 ஏக்கா் தரிசு நிலம் இருக்க வேண்டும். இதன்படி 2 தொகுப்புகளுக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டு (20 ஹெக்டோ்) தற்போது தொகுப்பு கிராமங்கள் தோ்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கா் வரை இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

சொந்த செலவில் (At own expense)

இத்திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகள் தங்களது நிலங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் முட்புதா்களை அகற்றுதல், அகற்றப்பட்ட முட்புதா்களை அப்புறப்படுத்தி நிலத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் சமப்படுத்துதல், இருமுறை உழவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்.

உழுத நிலங்களில் தொழு உரம் இடுதல், வேலையாட்களின் கூலி மற்றும் சிறு தானியப் பயிா்கள் (சோளம்) விதைப்பு செய்தல் போன்ற பணிகளும் இடம்பெறும்.

எனவே கபிலா்மலை வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாயப்பினை பயன்படுத்திக் கொண்டு நமது நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு உறுதுணையாக இருப்பதோடு தங்களின் வாழ்வாதாரத்தினை இதன் மூலம் உயா்த்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி துணை வேளாண்மை அலுவலா் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்களை தொடா்பு கொண்டு தங்கள் பெயா்களை பதிவு செய்து கொள்ளலாம்.

தகவல்

கோவிந்தசாமி

வேளாண்மை உதவி இயக்குநா்

மேலும் படிக்க...

இந்த இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு- முழு விபரம் உள்ளே!

பூச்சிமருந்து மற்றும் பூஞ்சான மருந்துகள் பாதுகாப்பு மசோதா - ஒரு பார்வை!

யாருக்கு இல்லை செல்ஃபி மோகம்- 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிர் தப்பிய அதிசயம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)