வேளாண் துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வால் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைநார் உற்பத்தியும், அதனால் வருவாயும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வாழை சாகுபடி (Banana cultivation)
திருநெல்வேலி மாவட்டத்தில் சுத்தமல்லி, பழவூர், கொண்டா நகரம், கல்லூர், மானூர், ரஸ்தா, அம்பாசமுத்திரம், கல்லிடைக் குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தை, மாசிப்பட்டத்தில் வாழை சாகுபடி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
வாழை நார் (Banana fiber)
வாழையில் இலை, பூ, காய், பழம், தண்டு மட்டுமன்றி வாழைநாரும் வருவாய் ஈட்டித்தருவதாக உள்ளன.
மட்டை உரம் (Bat compost)
வாழைத்தார் அறுவடைக்குப்பின் வாழை மட்டைகளை வயலிலேயே எரித்து உரமாகத் தான் பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர்.
பன்மடங்கு அதிகரிப்பு (Multiple increase)
இந்நிலையில், விவசாயிகளிடம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையில் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக வாழைநார் உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பல்வேறு ரகம் (Different type)
இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ஒரு ஏக்கருக்கு 1,000 வாழைக் கன்றுகள் நடப்படுகின்றன. ஏத்தன், ரதகதளி, செவ்வாழை உள்ளிட்ட அனைத்து ரக வாழையில் இருந்தும் நார் பிரித்து எடுக்க முடியும்.
300 கிராம் (300 Gram)
ஒரு மரத்தில் இருந்து 300 கிராம் வாழை நார் கிடைக்கும். வாழையின் தண்டுப் பகுதியை அறுவடை செய்த 48 மணி நேரத்தில் நார் பிரித்து எடுக்கப்பட வேண்டும்.
20 கிலோ நார் (20 kg fiber)
வாழை நாரில் இருந்து நீர்ப் பகுதி வெளியேற அதனை சூரிய வெளிச்சத்திலோ, அல்லது நிழலிலோக் காய வைக்க வேண்டும். வாழை நாரைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் மூலம் 8 முதல் 10 மணி நேரத்தில் 100 வாழை மரங்களில் இருந்து, 15 முதல் 20 கிலோ நாரைப் பிரித்து எடுக்கலாம்.
வருவாய் அதிகரிக்கும் (Revenue will increase)
எனவே புதுக்கோட்டையைப் போன்று, பிற மாவட்ட விவசாயிகளும், விழிப்புணர்வுடன் செயல்பட்டால், வாழை நார் உற்பத்தியும் அதிகரிக்கும். அதிக வருவாயையும் ஈட்ட முடியும்
மேலும் படிக்க...
3 விதமான சலுகைகளில் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தலாம்!அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
புதுப்பொலிவுடன் காட்சி தரும் மேட்டூர் அணை! நாளை தண்ணீர் திறப்பு!
கோவைக்காய் பயிரிட சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!