பாகற்காய் கொடிவகையை சேர்ந்த தாவரமாகும். வெப்ப பிரதேசத்தில் தான் அதிகம் வளரும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது இந்த பாகற்காய். சர்க்கரை நோய், பித்தம், பசிதூண்டுதல், இரத்த அழுத்தம், நரம்பு கோளாறு மேலும் பல பிரச்னையிகளுக்கு மருந்தாக உள்ளது.
பயிரிடும் முறை
நிலத்தை நன்கு உழுத பின்னர் இரண்டு மீட்டர் இடைவேளை விட்டு இரண்டு அடி ஆழத்திற்கு குழி வெட்ட வேண்டும். பின்னர் குழிக்கு ஐந்து அல்லது ஏழு விதைகளை ஊன்ற வேண்டும். பின் நீர் பாய்ச்ச வேண்டும். கொடி வகை என்பதால் கொம்புகளை நிலத்தில் ஊன்றி சிறிய கம்பிகளைக்க கொண்டு பந்தல் அமைக்க வேண்டும்.
நாட்பது நாட்களில் காயிக்கத்தொடங்கி விடும். வாரத்திற்கு இரு முறை பறித்துக்கொள்ளலாம். சுமார் ஆறு மாத காலம் வரை தொடர்ந்து பயிரிடலாம். ஒரு ஏக்கருக்கு பத்து முதல் பதினைந்து டன் வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
பாகற்காயில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. பாகற்காய் தினமும் எடுத்துக்கொள்வதால் நீரிழிவு இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாகும். உடல் மெலிதாக இருப்பவர்களுக்கு பசி தூண்டல் உண்டாகும். பித்தம், இரத்த அழுத்த கோளாறு சீராகும். பாகற்காய் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சியை கொன்று விடும்.பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். மேலும் மிக சிறந்த மருத்துவ குணம் என்றால் புற்று நோய் செல்களை அழிப்பதில் உதவுகிறது. முழு பாகற்காய், பாகற்காயின் மேல் பகுதி, பாகற்காயின் இலைகள் என்று அனைத்திலும் மருத்துவ குணம் உள்ளது.