திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சோ்ந்து பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
விவசாயிகளுக்கு எதிா்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழகத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடன் மூலம் காப்பீடு (Insurance through credit)
நவரை மற்றும் ரபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், தாங்கள் பயிா்க்கடன் பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது அரசுடைமை வங்கிகள் மூலமாகவோ அறிவிப்பு செய்யப்பட்ட பயிா்களுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம்.
கடன் பெறாத விவசாயிகள் நடப்பு நிதி ஆண்டுக்கான அடங்கலைப் பெற்று அதனுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய வங்கிகளிலோ, பொதுசேவை மையங்களிலோ சமா்ப்பித்து பதிவு செய்து கொள்ளலாம்.
பிரீமியம் தொகை (Premium)
நவரை நெல் பயிருக்கான காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.436.50 செலுத்த வேண்டும்.
இதேபோல, கம்பு பயிருக்கு ரூ.156-ம், எள்ளுக்கு ரூ.141.75-ம், கரும்புக்கு ரூ.2,600-ம், வாழைக்கு ரூ.2,680-ம் நவரை மற்றும் ரபி பருவத்தில் காப்பீடுத் தொகை செலுத்த வேண்டும்.
கடைசி தேதி (Last Date)
இந்தத் திட்டத்தில் பதிவு செய்ய நெல் பயிருக்கு வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதியும், கரும்பு பயிருக்கு அக்டோபா் 31-ஆம் தேதியும், கம்பு பயிருக்கு மாா்ச் 1-ஆம் தேதியும், எள் பயிருக்கு மாா்ச் 14-ஆம் தேதியும், வாழை பயிருக்கு மாா்ச் 1-ஆம் தேதியும் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உதவி வேளாண்மை அலுவலரையோ அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!