Horticulture

Saturday, 13 February 2021 12:10 PM , by: Elavarse Sivakumar

வேளாண் பயிர்களுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைப்பதற்கு , இணையதளத்தில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் பதிவு (Register on the website)

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

100% மானியம் (100% subsidy)

பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் வேளாண், தோட்டக்கலைப் பயிர்களுக்கு நுண்ணீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

அதன்படி கோவை மாவட்டத்தில் வேளாண் நுண்ணீர்ப் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஆண்டு முடிய உள்ள நிலையில் இலக்கினை முடிப்பதற்கு வேளாண் துறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி நுண்ணீர்ப் பாசனம் அமைக்க இதுவரை வேளாண் விரிவாக்க அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்து வந்தனர்.

இணையதளத்தில் பதிவு (Register on the website)

  • தற்போது விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • இணையதளத்தில் விவசாயிகளே பதிவு செய்து கொள்ளலாம்.இதைத் தவிர தங்களுக்கு விருப்பமான நுண்ணீர்ப் பாசனநிறுவனத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

  • நுண்ணீர்ப் பாசனத்திற்கும், நுண்ணீர் பாசனத்துக்கு குழாய் அமைக்கவும், குழி எடுப்பதற்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

  • கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விவசாயத்திற்கு இலவச நீர் பாசன கருவிகள்- வேளாண் துறை அழைப்பு!

அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை-கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!

அஜினோமோட்டோ ஒரு Slow Killer - தெரியுமா உங்களுக்கு?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)