காபியானது உலகளவில் முக்கியமான பானமாக அருந்தப்படுகிறது. காபியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. காபியினால் ஏற்படும் நன்மைகள், தடுக்கும் வியாதிகள் தொடர் பட்டியலாக அமையும். காபியில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், டிரைகோனாலின், குவினின் மற்றும் மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்கள் இன்சுலின் போலவே வேலை செய்து, சர்க்கரை உணவுப் பொருட்களைச் செரிமானம் செய்து, திசுக்களுக்குச் கொண்டு செல்கின்றன. இதனால் குறிப்பாக நம் நாட்டில் அச்சுறுத்தி வரும் சர்க்கரை நோயை காபி கட்டு படுத்தும் என்பதை நம்புவீர்களா? ஆம் சர்க்கரை நோய் வருவதை 25 முதல் 50 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என்று ‘சயின்ஸ் டெய்லி’ இதழ் கூறுகிறது. உற்சாகத்தைத் தூண்டி, உடல் உழைப்பை மிகுதியாக்கும் திறன் காபிக்கு உண்டு.
இவ்வாறு மேலும் பல நன்மைகளை அளிக்கும் காபியின் அறுவடை தொழில்நுட்பம் பற்றிய விவரங்கள்.
பதப்படுத்தும் செய்முறை:
காபி பதப்படுத்துதலில் அதன் மேல்தோல் சதைபகுதி parchment silver screen ஆகிய பகுதிகள் நீக்கப்படுகிறது. பதப்படுத்தப்படும் முறையைப் பொறுத்தே காபியின் தரம் மாறுபடுகிறது. பரவிவிடப்பட்ட காபி கொட்டைகள் சந்தைகளில் கிடைக்கின்றது. இது இருவகையில் செய்யப்படுகின்றன, ஒன்று உலர்ந்த முறை மட்டொன்று ஈரப்பதம். உலர்ந்த முறையானது கொட்டைகளை சூரிய ஒளியில் வைத்து உலர்த்தப்படுவதாகும்.இரண்டாவது முறையில் கொட்டையானது நன்கு கழுவப்பட்டு பின்பு பெக்டின் என்சைம்கள் சேர்க்கப்படுகிறது, அதன் பின் கொட்டைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொதிக்க வைக்கப்ப படுகிறது.
பதப்படுத்தப்பட்ட காபியானது தரம் பிரித்து அதன் வடிவம் மற்றும் அளவுகள் பொறுத்து மாற்றப்படுகிறது.
வறுத்தல்:
இம்முறையில் அதிக இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, இதனால் மனதை ஈர்க்கும் நறுமணம், சிறந்த சுவை, காபியின் நிறம், மற்றும் சுவையின் வகை அதிகரிக்கின்றன.
அரைத்தல்:
வறுத்த கொட்டைகள் 3 அளவுகளில் அரைக்கப்படுகிறது. மென்மையான துகள்கள், நடுத்தர துகள்கள் மற்றும் கரமுரடான துகள்கள் வகைகளாகும். மென்மையான துகள்களை விட கரமுரடான துகள்கள் அதிக நறுமணமும்,சுவையும் கொண்டுள்ளதாக.
கலவை:
விற்பனையில் இரண்டு வகையான காபி பொடிக்க உள்ளது. ஒன்று சுத்தமான காபி கொட்டைகளை மட்டுமே கொண்டது மட்டொன்று ப்ரெஞ்காபி என்பது சிக்கரி உள்ளடக்கியது. அதன் அளவு 50% மேல இருக்கக்கூடாது. காபியின் தரத்தை அறிய திடம், மணம், அளவு, அமிலத் தன்மை, ஆகியவை முக்கிய காரணிகளாகும். வித்தியாசமான தரவரிசைகளின் கலவையான கலப்பு முறை இந்த குணங்களையும் மற்றும் சிறந்த நன்மைகளையும் கொண்டுவருகிறது.
காஃபின்:
இது அல்கலாயிட் பொருளை தூண்டும் காரணிகளை கொண்டதாகும். நீண்ட நேரம் உலர வைக்கப்பட்ட காபியானது காஃபினிலிருந்து பிரிக்கப்பட்டதாகும். காஃபின் இல்லாத காபியை வேதியியல் முறையில் கொட்டைகளிலில் காஃபினை நீக்கலாம்.
மணம்:
இது கந்தக கலவையை உள்ளடக்கியுள்ளதால், சிறந்த மனம் தொடுக்க கூடியது.
கசப்பு சுவை கொடுக்கும் காரணி:
பாலீபீன், சானின் இவைகள் நீரில் கரைய கூடியவை அதிக நேரம் பதப்படுத்துவதால் டானின் அளவு அதிகமாவதுடன் கசப்பு சுவையும் அதிகரிக்கிறது.
காபி தயாரிக்கும் முறைகள்:
முறைகள் |
மணம் |
டானின் |
வரைமுறை
|
பில்டர் |
சிறந்த மணம் நீடிக்க கூடியது |
குறைவாக பிரித்தெடுக்கப்பட்டது |
டிகாஷன் சூடாக இருக்க கூடாது
|
பெர்குலேட்டர் |
மணம் குறையும், மாறுபாடற்ற காற்றோட்டத்தில் புளிக்க வைத்து அதன் திரவத்தை தூவ விதிவளைகளாக்குதல் |
வெண்ணீரின் மரு சுழற்சியால் காபி கொட்டடைகளில் பிரித்தெடுப்பு அதிகம் உள்ளது |
அதிக கசப்பு |
உலர வைத்தல் |
சிறந்த தக்கவைப்பு |
குறைந்த பிரித்தெடுப்பு |
முழுமையடையாத நறுமண பிரித்தெடுப்பு |
|
|
|
|
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN