மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 June, 2019 10:04 PM IST

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு  

                                                                 -திருவள்ளுவர்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின் மகத்துவத்தையும், உழவின் மகத்துவத்தையும் உலக பொதுமறையில் புகுத்தியவர். நீர் பாசனத்தை பற்றி நாம் அனைவரும் அறிந்து கொள்ளவே இப்பதிவு.

நீர் பாசனம்

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியினை  பணத்தைக் கொண்டு மதிப்பிடுவது போல தண்ணீரைக் கொண்டு அந்நாட்டின் வளமை நிர்ணியக்க படுகிறது. சந்தையில் ஒரு கிலோ நெல் விதை விலை ரூ.20  கிடைக்கும். ஆனால், இதை உற்பத்தி செய்ய தேவையான தண்ணீரோ 2,500 லிட்டர் ஆகும். பெரும்பாலான விவசாக்கிகள் நஷ்டமடைய இதுவும் ஒரு காரணம்.

பண்டைய கால பாசன முறை

பண்டைய காலங்களில்  நீர்வளமானது முறையை பராமரிக்க பட்டது. நிலத்தடி நீர் மட்டம் நன்றாக இருந்தது. குளம், குட்டை, கால்வாய் , ஏரி , ஓடை, ஆறு , கடல் என எண்ணற்ற நீர் ஆதாரங்களுடன் தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் வைத்திருந்தோம். வேளாண்மையில் கூட கணக்கு பார்க்காமல் தண்ணீர் பாய்ச்சினோம். பண்டைய பாசனம் இவ்வாறாக நடந்தது.

நவீன நீர் பாசனம்

வேளாண்மையில் நீரின் தேவை அதிகமாக இருப்பதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைவாக இருப்பதாலும் விவசாகிகள்   மாற்று வழியாக நவீன நீர் பாசனத்தை கையில் எடுத்துள்ளனர். இது 30%  - 70% வரை தண்ணீர்  சேமிக்க படுவதுடன் செலவும் மிச்சமாகிறது என்கிறார்கள் விவசாகிகள்.

நவீன நீர் பாசன முறைகள்

அடுக்கு நீர்ப்பாசனம்

தெளிப்பு நீர்ப் பாசனம்

அலைநீர்ப் பாசனம்

சொட்டு நீர் பாசனம்

இந்நான்கில் தெளிப்பு நீர்ப் பாசனம் மற்றும் சொட்டு நீர் பாசனம் பரவலாக பயன்பட்டு வருகிறது. இதற்கு அரசு நில அளவினை பொறுத்து 75% முதல் 100% வரை மானியம் தருகிறது.

விவசாயத்தில் நீரின் தேவை அதிகமாக இருப்பதால் மக்கள் சில பாசன முறைகள் மூலம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது பெரும்பாலான விவசாய நிலங்கள் நேரடி பாசனதை கைவிட்டு தெளிப்பு நீர், சொட்டு நீர் என மற்ற வழிகளை கடைபிடிப்பதில் முனைப்புடன் இருக்கிறார்கள்.  நீர் பாசனத்தை தேர்தெடுக்கும் முன்பு நாம் பயிர், நில அமைப்பு, தண்ணி வசதி, நீர் இறைக்கும் வசதி, பருவநிலை போன்றவற்றை அறிய வேண்டும்.

நீர் பாசனத்தை தேர்தெடுக்கும் முன்பு செய்ய வேண்டியவை

முதல் நிலை

மழை அளவு /மழை பெய்யும் மாதங்கள்

நிலவும் தட்பவெப்ப நிலை

நிலத்தில் விழும் சூரிய ஒளியின் அளவு

காற்றில் இருக்கும் ஈரப்பதம் / ஆவியாகும் அளவு

காற்று வீசும் திசை/ வேகம்

இரண்டாம் நிலை

வேளாண் கல்லூரிகளிலோ, வேளாண் வல்லுநர்கள் துணை கொண்டு மண்னினை  ஆய்வு செய்ய வேண்டும்.அதில் கவனிக்க வேண்டியவை

மண்ணின் கார அமில தன்மை,

நிலத்தடி நீரில் உள்ள உப்பு 

மின்சாரத்தை கடத்தும் திறன்

நீரில் வரும் மண் துகள்களின் அளவு

நிலத்தின் ஆழம்

நிலத்தின் பௌதிகத் தன்மை

மூன்றாம் நிலை

விதைக்க உள்ள பயிர்

விதையின் ரகம்

நடவு இடைவெளி

வரிசை முறை

பயிர் அடரும் தன்மை,

வேர் அமைப்பு

சாகுபடி முறை

 இவையனைத்தையும் சேகரித்து பின் நாம் நமது விவசாயத்தை தொடங்கலாம்.  

சொட்டு நீர் பாசனதிற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் அங்கீகாரம் பெற்ற சொட்டு நீர்  அமைக்கும் நிறுவனங்களில் ஏதேனும்  ஒரு நிறுவனத்தை விவசாயி  தேர்வு செய்துகொள்ளலாம். சொட்டுநீர் பாசனமோ,தெளிப்புநீர் பாசனமோ  அமைக்கும் முன்பு  விளைநிலத்தை வேளாண்மை பொறியியல் துறை சார்த்த  பொறியாளார்கள் ஆய்வு பணி மேற்கொண்டு பின்பு விலைப் புள்ளியினை டான்ஹோடா என்ற  இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள்.  (தற்போது அங்கீகாரம் பெற்ற மட்டுமே மானியம் வழங்க படுகிறது)

சொட்டு நீர் பாசனம் அமைக்கும் முறை

முதலில் எந்த வகையான நீர்ப்பாசனத்தை தேர்தெடுக்க உள்ளோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசனம் எனில் நீர் இறைபதற்கு எதுவாக மோட்டாருடன் கூடிய கிணறோ அல்லது ஆழ்துளைக்கிணறோ போதிய நீர்வளத்துடன் இருத்தல் அவசியமாகும்.

சொட்டுநீர் பாசனம் அமைக்க தேவையான நகல்கள்

சொட்டு நீர் பாசனம்

விவசாயின் புகைப்படம்

குடும்ப அட்டை நகல்

சிட்டா நகல்

அடங்கல் நகல்

நிலத்தின் வரைபடம்

கிணறு ஆவணம்

நீர் மற்றும் மண் பரிசோதனை ஆவணம்

ஆதார் அட்டை நகல்

வட்டாச்சியரால் வழங்கப்பட்ட சிறு / குறு விவசாயி சான்றிதழ்

குத்தகை நிலமாக இருப்பின் 7 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம், சொந்தமாக கிணறு இல்லாமல் மற்றவரின் கிணற்றை பயன்படுத்துபவர் எனில் அதற்கான ஒப்புதல் நகல் போன்றவற்றை வட்டாச்சியர் தோட்டக்கலை உதவி இயக்குனர்/வேளாண் உதவி இயக்குனரை அணுகி மேல குறிப்பிட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மானியம் பெற நடவு செய்ய வேண்டிய பயிர்கள்

மானியம் பெற அரசு அனுமதித்துள்ள பயிர்களை மட்டும் நடவு செய்ய வேண்டும். நமது பகுதிகளில் நிலவும்  காலநிலை, தட்பவெப்பம், நீரின் அளவு இவற்றை கருத்தில் கொண்டு அரசானது அட்டவணை வழங்கியுள்ளது.அவை

காய்கறிகள்/பழங்கள்/ பூக்கள்  

மா, பலா, வாழை

கொய்யா, ஆரஞ்சு , எலும்பிச்சை

நெல்லி, முருங்கை, பாக்கு

திராட்சை,மாதுளை, பப்பாளி

இஞ்சி, மஞ்சள்,கோலியஸ்

மல்லிகை, ரோஜா, செங்காந்தள்

சொட்டு நீர் பாசன வகைகள்

வெளிப்புறமாக குழாய்களைப் பதித்து பயிர்களுக்கு தண்ணீர் விடுவது.

நிலத்திற்கு அடி பகுதியில் குழாய்களை அமைத்து தண்ணீர் விடுவது.

சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகள்

ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரைக் கொண்டு, சொட்டு நீர் பாசனம் மூலம் இரண்டரை ஏக்கர் வரை நம்மால்  சாகுபடி செய்ய முடியும். அதிக அளவிலான பயிர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கிறது.

பெரும்பாலான பயிர்களின் நீர் மற்றும் சத்துகளை உறிஞ்சும் செயல்திறன் மிக்க வேர்கள் மண்ணின் மேல்மட்டத்திலிருந்து ஒரு அடி ஆழத்தில் இருக்கும், அதனால் பயிர்களின் வளர்ச்சி எவ்வித தடையும் இன்றி நன்கு வளரும்.

சொட்டு நீர் பாசனம் முறையில் பயிர்களுக்கு தேவையான நீர், தேவையான ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான பொருட்களை பயிர்களின் வேர்ப் பகுதி, மேற் பகுதிகளில், நேரடியாக அளந்து தருகிறது.

சொட்டு நீர் பாசனம் செய்வதினால் செடியினை சுற்றி எப்பொழுதும் 60% ஈரப்பதமும், 40 % காற்றோட்டமும் இருக்கும். வேருக்கு அருகில் உரம் மற்றும் நீர் கிடைப்பதால், பயிரின் வேர் மற்றும் செடிகளின் வளர்ச்சி கூடுதலாகி மகசூலும் அதிகளவில் கிடைக்கிறது.

பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கும் அளவு குறைகிறது. நேரடியாக தேவையான உரம் மற்றும் மருந்து வேர்பகுதிகளுக்கு செல்வதால் நோய் மற்றும் பூச்சி கட்டுப்படுவதுடன் களைகள் வளர்வதை தடுக்கிறது.

சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் விவாசாயிகளுக்கு உண்டாகும்  நன்மைகள்

சொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் விவாசாயிகளுக்கு தண்ணீர் சிக்கனமாவதுடன், களைகளும் கட்டுப்பாட்டு கூடுதல் மகசூல் கிடைக்கிறது. இதனால் வேலை ஆட்களுக்ககாக ஆகும் செலவும் குறைகிறது.

குறைந்த அளவு நீரைக் கொண்டு அதிகப் பரப்பில் விவசாயம் செய்ய முடிகிறது. 75% நீரை இப்பாசனத்தின் மூலம் சேகரிக்கலாம். சாகுபடிக்கு செய்யும் செலவு குறைந்து அதிக வருமானம் கிடைக்கும்

சொட்டு நீர்ப்பாசனம் என்பது அனைத்து வகையான நிலப்பரப்புகளுக்கும் பயன் படுத்தலாம். சமமற்ற நிலம், நீர் தேங்கும் நிலம் மற்றும் மலைப்பகுதிகளிலும் இவ்வகை நீர்ப்பாசனத்தை பயன்படுத்தி விவசாயி பலன் பெறலாம். 

குறைந்த இடைவெளி, அதிக இடைவெளி என அனைத்து வகையான பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இதனால் தரமான விளை பொருள்களை விளைவித்து அதிக லாபம்  பெறலாம்.

சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு விரும்புவோர் தோட்டக்கலை துறையினை அணுகுவதன் மூலம் நீர் பாசனத்திற்கு தேவையான கருவிகள் 65 %  மான்ய விலையில் கிடைக்கிறது. 

சொட்டு நீர் பாசனம் அமைத்தபின் செய்ய வேண்டியவை

மாதம் ஒரு முறை குழாய்களை “குளோரின்” கொண்டு சுத்தம் செய்வதால் சல்பேட், பாஸ்பேட், போன்ற உரங்களினால் உண்டாகும் உப்பிணை தடுக்கலாம்.

பாசி படிவதை “குளோரின்” கொண்டு நீக்கலாம். ஹைட்ரோகுளோரிக் அமிலம் மூலம் கால்சியம் கார்பனேட் அடைப்புகளை நீக்கலாம்.

Anitha Jegadeesan

Krishi Jagran

English Summary: Come Let Us Know About Modern Irrigation. Detailed Study of Drip irrigation And Its Benefits
Published on: 24 June 2019, 10:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now