Horticulture

Saturday, 05 June 2021 07:22 AM , by: Elavarse Sivakumar

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை சிரமமின்றிப் பெற ஏதுவாக, வேளாண் துறை மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வேளாண் இணை இயக்குனர் சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை (District Administration Action)

கொரோனாத் தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் மக்களுக்கு எவ்வித தடையுமின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நடமாடும் காய்கறி வாகனம் (Mobile vegetable vehicle)

இதன்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி மற்றும் நகராட்சி மூலம் நடமாடும் காய்கறி வாகனம் இயக்கப்பட்டு வருகின்றன.

உடனடியாகக் கிடைக்க (Available immediately)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடனடியாக நுகர்வோர்களுக்குக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறை (Control room)

விவசாயிகளிடம் உள்ள கையிருப்பு விபரம் மற்றும் நுகர்வோர்கள் தேவை குறித்துத் தகவல் தெரிவிக்கும் பொருட்டு மாவட்ட அளவில் ஒருங்கிணைந்தக் கட்டுப்பாட்டு அறை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் விபரம் அளித்தல் (Providing details of farmers)

இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களது காய்கறிகள் மற்றும் பழங்கள் இருப்பு விபரத்தினை தெரிவித்தால், தேவைப்படும் இடங்களுக்கு வழங்க உரிய துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், நுகர்வோர் சங்கங்களுக்குத் தேவைப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விபரம் தெரிவித்தால் அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இயங்கும் நேரம் (Running time)

காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும் இந்தக் கட்டுப்பாட்டு அறையை 04151-291335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

விழுப்புரத்தில் 24,000 டன் நெல் கொள்முதல்! கூடுதல் விலை கிடைப்பதால் வரத்து அதிகரிப்பு!

அதிக கொள்ளளவு கொண்ட நிரந்தர சேமிப்பு கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

கொரோனா ஊரடங்கு எதிரொலி! பன்னீர் திராட்சை பழங்கள் செடியிலேயே அழுகி வீணாகிறது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)