தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாதது என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மழையால் பாதிப்பு (Damage by rain)
குறிப்பாக கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், மழை பெய்வதால், நெல்லில் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
2-வது போக நெல் சாகுபடி (2nd go paddy cultivation)
கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றிய பகுதிக்கு, ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை பயன்படுத்தி, இரண்டு போகம் நெல் சாகுபடி நடக்கிறது.
இந்நிலையில், ஆழியாறு அணையில் இருந்து நெல் சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், இரண்டு வாரங்களுக்கு முன்பாக விவசாயிகள் நெல் நாற்றாங்கால் விட்டனர்.
வேளாண்துறை அறிவுரை (Agricultural advice)
ஒன்றிய பகுதி முழுவதிலும் கடந்த, பத்து நாட்களாக நடவுப்பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இந்நிலையில், தொடர்மழை பெய்வதால், நடவு செய்த நாற்றுக்களைக் காக்க, வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இது குறித்து ஆனைமலை வேளாண்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
சேதமடைய வாய்ப்பு (Chance of damage)
நெல் நடவு செய்யும் பகுதிகளில் ஏற்கனவே, தண்ணீர் நிறுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், மழை பெய்வதால் அதிகப்படியான தண்ணீர் நின்று நெற் பயிர்கள் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
நீர் தேக்கம் (Water stagnation)
சேதத்தை தவிர்க்க, அவ்வப்போது உரிய வடிகால் செய்து, அதிகப்படியான நீர் வயல்களில் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
தழைச்சத்து உரங்கள் (Nutrient fertilizers)
மேலும், மழைக்காலம் முடியும் வரையில் தழைச்சத்து உரங்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
புகையான் தாக்குதல் (Tobacco attack)
-
அதிகப்படியான உரம் பயன்படுத்தினால், இலை சுருட்டுப்புழு மற்றும் புகையான் தாக்குதல் அதிகரிக்கும்.
-
மழையால் நெல்லில் ஏதேனும் நோய் தாக்குதல் காணப்பட்டால், வேளாண் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஜாதிக்காய், கிராம்பு, மிளகு பயிரிட ரூ.20,000 மானியம்!
கரும்புக்குச் சொட்டு நீர்ப் பாசனம் -ரூ.ஒரு லட்சத்திற்கு மேல் மானியம்!