பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 28 September, 2022 5:26 PM IST
50% government subsidy to set up a vertical garden?

செங்குத்து தோட்டம் பொதுவாக Vertical farming என ஆங்கிலத்தில் அழைக்கப்படும், நவீன தோட்டக்கலையின் அங்கமாகும். நாளடைவில், இம்முறை தோட்டக்கலையின் வளர்ச்சி, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து இருப்பது குறிப்பிதக்க உண்மையாகும். எனவே, இதை புதிதாக அமைக்க விரும்பும் விவசாயிகள், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் காணலாம்.

செங்குத்து தோட்டக்கலை என்றால் பலர் அறிந்திருப்பீர்கள், இருப்பினும் ஒர் பார்வை: 

பயன்கள்

  • குறைந்த இடத்தில் காய்கறிகள் மற்றும் அழகு செடிகள் வளர்கலாம்.
  • விவசாய இடங்கள் இல்லா பெருநகரங்களில் செங்குத்து தோட்ட அமைப்பின் மூலம் தங்களுக்கு தேவையான காய்கறிகளை நகரவாசிகள் பயிரிடலாம்
  • காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது.
  • நஞ்சில்லா காய்கறிகளை அறுவடை செய்து மகிழலாம்.

செங்குத்து தோட்டத்திற்கு ஏற்ற காய்கறிகள்

  1. புதினா
  2. கொத்தமல்லி
  3. முள்ளங்கி
  4. வெங்காயம்
  5. கீரைகள்

செங்குத்து தோட்டம் அமைக்க அரசின் உதவி என்ன?

50 சதவீத மானியத்தில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெருநகரங்களுக்கு பின்னேற்பு மானியமாக 40 சதுர அடிக்கு (ஒரு சதுர அடிக்கு ரூ.375 வீதம்) ரூ.15,000/- வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • இத்திட்டத்தில் பயன்பெற http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_newphp என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும்.
  • செங்குத்து தோட்டம் அமைப்பதற்கான வரையறைகள்
  • கட்டமைப்பு- UV கதிர்வீச்சு பாதுகாப்புடன் கூடிய MSபிரேம் அளவு: செங்குத்து தட்டை: அளவு - அகலம் 25 மி.மீ., தடிமன் 3மி.மீ இடைவெளி: 30 செ.மீ, கிடைமட்ட கம்பி: அளவு- விட்டம் 3மி.மீ, இடைவெளி: 15 செ.மீ. தூள் பூசப்பட்ட ஸ்க்ரு அளவு-6 மி.மீ
  • பி.வி.சி தொட்டிகள்- தொட்டியின் நீளம் - 30 செ.மீ., அகலம்-15 செ.மீ, தொட்டிகளின் எண்ணிக்கை - 80
  • ஜியோ டெக்ஸ்டைல் பேப்ரிக் - 160 GSM நைலான் பின்னப்பட்ட ஜியோடெக்ஸ்டைல் வடித்துணி
  • வளர்ப்பு ஊடகம் - மண்ணற்ற ஊடகக் கலவை (80% தேங்காய் நார் கழிவு, 10% செம்மண், 5% மண்புழு உரம், 5% பெரிலைட் (<0.5 மின்கடத்துத்திறன்), தேவையான அளவு இயற்கை உரம் மற்றும் இயற்கை மருந்து)
  • விதைகள்/செடிகள் - கீரைகள், கொத்தமல்லி, முள்ளங்கி, வெங்காயம், புதினா போன்றவற்றின் விதைகள் மற்றும் நடவுச்செடிகள்.
  • சொட்டு நீர் பாசன - 16மிமீ விட்டம் கொண்ட HDPE குழாய் மற்றும் 8 LPH இன்லைன் அல்லது ஆன்லைன் உமிழ்ப்பான்.

மேலும் படிக்க:

கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் 26 வரை விண்ணப்பிக்கலாம்

குருணை அரிசி ஏற்றுமதிக்கு செப். 30-ம் தேதி வரை அனுமதி!

English Summary: Did you know that you can get 50% government subsidy to set up a vertical garden?
Published on: 23 September 2022, 03:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now